Monday, 20 April 2015

நடிகர் விஜய் இப்படி பட்டவரா ? - அதிர்ச்சி உண்மைகள் !


நடிகர் விஜய் இப்படி பட்டவரா ? - அதிர்ச்சி உண்மைகள் !


மீடியாக்கள், அரசியல்வாதிகல் என அனைவராலும் ஒடுக்கப்பட்டு , முடக்கப்பட்டு , இவரது நற்குணங்கள் அனைத்தும் மறைக்கப்பட்டு , போலி விமர்சனங்களை பரப்பி அதன் மூலம் இவரை அளிக்க துடிக்கும் ஜந்துகளை சற்று ஓய்வு எடுக்கவிட்டு , இளையதளபதியின் உண்மையான முகத்தை இப்போது பார்க்கலாம் ....    
vijay_2013_by_anodd-d5utaa4.jpg


இளைய தளபதி விஜயின் வரலாறு 

இளைய தளபதி விஜய் :
22 வருடம் தமிழ் சினிமா வாழ்க்கை..
இதுவரை இவரது 3 படங்கள் 100 கோடிக்கும் மேல் வசுல் செய்துள்ளது
Thuppakki , Kaththi (only tamil release) .. 
அதில் 192 கோடி #Thuppakki படம் தான் முதலில் உள்ளது.. இரண்டு மற்றும் மூன்றாம் இடத்தில : #Kaththi - 183cr தமிழ் வெளியீடு மட்டும் , #Nanban - 100 கோடிக்கு மேல் (தமிழ் மற்றும் தெலுங்கு வெளியீடு) 28 பாடல் பாடியுள்ளார் அனைத்தும் வெற்றி பெற்றுள்ளது ..6 விஜய் டீவி விருதுகள். 1 டாக்டர் பட்டம்.. 2 அடுத்த சூப்பர் ஸ்டார் விருது.. 1 கலைமாமணி விருது என இன்னும் பல விருதுகளை வாங்கியுள்ளார் , எனினும் விருதுகளுக்கு மதிபளிக்காமல் , பணம் கொடுத்து திரையில் தன்னை பார்த்து மகிழும் ரசிகரை மகிழ்விப்பதயும் , தன்னை நம்பி பல கோடிகளை போட்டு படம் தயாரிக்கும் தயாரிப்பாளரை மகிழ்விப்பதயுமே தனது முதல் குறிக்கோளாக கொண்டு படங்களை தேர்வு செய்கிறார் .

திரைத்துறையில் சிறந்த Actor,Dancer,Fighter,Singer ,Best Dialogue Deliver, Humour Sense, Etc .இதில் சிறப்பு என்னவென்றால் எதையும் அலப்பரை , ஆடம்பரம் செய்யாமல் அமைதியாக செய்து முடித்துவிடுவார்

ஒரு பேட்டியில் ரஜினி கூறியதை போல் தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருப்பவர் , தேவை இல்லாத விஷயங்களில் மூக்கை நுழைப்பது , நடிகைகளுடன் கூத்து என்றெல்லாம் இருப்பவர் அல்ல இதனாலேயே திரைத்துறையில் சக நடிகர் / நடிகைகளுக்கு இவரை புடிக்காது . அனால் உண்மையாக ஒருவர் கஷ்டபடுகிறார் என்றால் தானாகவே சென்று உதவி செய்யும் மனப்பான்மை உடையவர் . ஜீவா சமீபத்தில் சொன்னது போல் படபிடிப்பில் குடை பிடிப்பது முதல் வீட்டில் சிறு சிறு வேலை செய்வதாகட்டும் இவரே செய்துவிடுவார் மற்றவரை தொந்தரவு செய்ய மிகவும் யோசிக்க கூடியவர் .

தன்னை பற்றி வெளி வரும் போலி விமர்சனகளை சற்றும் கண்டுகொள்ளமாட்டார் . யாரிடமும் அதிகம் கோவம் காட்டமாட்டார் . பெரியவர்களிடம் அதிக மரியாதை கொண்டவர் . அரசியல் வாதிகள் இவரை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் ஈடு பட்டு உருவாக்கும் ஒவ்வொரு நாடகத்துக்கும் மீடியாக்கள் இவரையே குறை கூறும் . தமிழ்நாட்டில் உள்ள பல மீடியாக்கள் இது போன்று செயல் பட்டு மக்களிடம் இவருக்கு ஒரு தவறான பெயரை ஏற்படுத்தினாலும் தனது தன்னம்பிக்கை , தன் ரசிகர்களின் அன்பால் மீண்டும் மீண்டும் செய்துகொண்டே இருக்கிறார் . சினிமா துறையில் இருப்பவர்கள் மட்டுமின்றி , பலரையும் வாழவைத்தவர் . 300 க்கும் மேற்பட்ட மாணவர்களை படிக்க வைத்து கொண்டிருக்கிறார் தன்னுடைய செலவில் சத்தமின்றி. .
vijay-latest-cute-stills-04.jpgபிற நடிகர்களை போல தான் வாழ்ந்தால் போதும் என்று நினைக்காமல் , தான் மட்டும் அல்லாமல் தன்னுடைய ரசிகனும் உயர வேண்டும் , முன்னேற வேண்டும் , நல்ல செயல்களில் ஈடு பட வேண்டும் , சமூக அக்கறை கொள்ள வேண்டும் என்று தன் ரசிகர்களை நல்ல பாதையில் தன்னோடு கை கோர்த்து அழைத்து செல்லும் நல்ல மனம் உடையவர் .

பிற நடிகர்களை போல் தனது பெயருக்கு சில ரசிகர் மன்றத்தினர் களங்கம் விளைவிக்கிறார்கள் என்று தெரிந்தவுடன் உடனடியாக அணைத்து மன்றத்தையும் கலைத்து தன்னை நம்பிய , தன்னை விரும்பிய அனைவரையும் தெருவில் விரட்டி அடிக்கும் மனம் கொண்டவர் அல்ல , உண்மையை சொன்னால் விஜய் தனது ரசிகர்களாலேயே நிறைய ப்ரிச்சனையில் சிக்கியுள்ளார் எனினும் இதுவரை அவர் தனது ரசிகர்களை ஒரு வார்த்தை கூட மனம் புண்படும் படி கூட பேசியதில்லை , அந்த அளவுக்கு ரசிகர் மேல் அன்பு கொண்டவர் தனது பெயர் கெட்டாலும் பரவா இல்லை , தனது ரசிகர் சந்தோசமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர் .

அது மட்டுமில்லாமல் இவர் செய்யும் உதவியை மற்ற நடிகர்கள் மாதிரி சொல்லிகாட்டவெ மாட்டார்.. தலகணம் இல்லாத ஆளு.. இவருக்கு தமிழ்நாடு மட்டுமின்றி உலக அளவில் மிக பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது .. இவ்வளவு பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தாலும் துள்ளி கூட கர்வம் இல்லாதவர் .

இவருடைய மிக பெரிய பலவீனம் : வெகுளி தனம் , விட்டு கொடுப்பது , அமைதி 
இவருடைய மிக பெரிய பலம் : ரசிகன் , உழைப்பு , தன்னம்பிக்கை 

இதில் குறிப்பிட்டிருக்கும் விவரத்தை ஒருவர் சமூகத்தில் வேண்டுமானால் ஏற்று கொள்ளாமல் மறுக்கலாம் சில சொந்த விருப்பு , வெறுப்புகழுகாக ஆனால் எந்த உள்நோக்கமும் அல்லாமல் தனது மனதளவில் சிந்தித்து பார்த்தல் இதனை யாராலும் மறுக்க முடியாது என்பதே தவிர்கமுடியாத உண்மை .

- இதை பிடித்திருந்தால் கட்டாயமாக ஷேர் செய்யுங்கள் 
 ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓ ↓