Wednesday, 20 August 2014

Additional Information's Of Windows 8

Additional Information's Of Windows 8



sUp8zAT.jpg?1




உங்கள் கம்ப்யூட்டரில் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை, தொடுதிரையுடன் அல்லது வழக்கமான மானிட்டருடன் பயன் படுத்துகிறீர்களா? அப்படியானால், இதில் கீழே தரப்பட்டுள்ள சில புரோகிராம்கள் கட்டாயமாகத் தேவைப்படும். இவை அனைத்தும் இலவசமே. எனவே, இவற்றைத் தரவிறக்கம் செய்து, கம்ப்யூட்டரில் பதிவு செய்து பயன்படுத்திப் பார்க்கவும். தேவையே இல்லை என, பயன்படுத்திப் பார்த்த பின்னும் உணர்ந்தால், நீக்கிவிடலாம். ஆனால், அப்படி நீக்க மாட்டீர்கள் என்ற உறுதி எனக்கு உண்டு. இதோ அந்த புரோகிராம்கள்

1. ஸ்கை டிரைவ் (SkyDrive):

ஸ்கை ட்ரைவினை ஏற்கனவே பயன்படுத்தி வந்திருப்பீர்கள். இவர்கள், விண்டோஸ் 8க்கான பதிப்பினைப் பதிவு செய்து, தங்கள் டெஸ்க்டாப்பில் ஒரு புரோகிராமாக வைத்துக் கொள்ளலாம். நம் பைல்களைப் பாதுகாப்பாகப் பதிந்து சேமித்து வைக்க நல்லதொரு இடமாக இது இயங்கி வருகிறது. பேக் அப் செயல்பாட்டிற்கு இது நிச்சயமாகத் தேவைப்படும் வசதியாக உள்ளது. இதனைத் தரவிறக்கம் செய்திடவும், மேலதிகத் தகவல்களுக்கும் செல்ல வேண்டிய இணைய தள முகவரி http://apps.microsof...m/windows/enus/ app/skydrive/2682e31415ab4510bbb3d33da78a44d9 

2. விண்டோஸ் 8 சீட் கீஸ் (Windows 8 Cheat Keys):

விண்டோஸ் 8 சிஸ்டம் இயங்கும் விதம், இயக்கப்படும் வழிமுறைகள் குறித்த, அத்தியாவசியத் தகவல்களை விரைவாகக் கற்றுக் கொள்ள விரும்புகிறீர்களா! வேறு எங்கும் செல்ல வேண்டாம் http://apps.microsof...5cbcb09267680e8 என்ற முகவரியில் உள்ள இணைய தளம் சென்று, விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கான முக்கிய இயக்கத் தொகுப்பு கீ அமைப்புகளைத் தரவிறக்கம் செய்து, கற்றுக் கொள்ளவும். கீ போர்ட் ஷார்ட் கட் மட்டுமின்றி, தொடுதல் வழி இயக்க முறைகளையும் இது கற்றுத் தருகிறது. அனைத்து புரோகிராம் டைல்ஸ்களையும் மொத்தமாகக் காணும் வழி, டைல்ஸ்களை மாற்றி அமைக்கத் தேவையான வழி முறைகள், புரோகிராம்களை நீக்கும் வழிகள் என அனைத்து வகையான இயக்க முறைமை வழிகளையும் இது தருகிறது. பொதுவான பல இயக்க வழிகளுக்கான கீ தொகுப்புகளும் விளக்கப்பட்டுள்ளன.

3. ஸ்கைப் (Skype):

பலர் தினந்தோறும், அடிக்கடி ஸ்கைப் புரோகிராமினைத் தங்கள் தனிப்பட்ட நண்பர்களுடன், உறவினர்களுடன் தொடர்பு கொள்ள, ஸ்கைப் புரோகிராமினைப் பயன்படுத்தி வருகின்றனர். நேரடியான வீடியோ, ஆடியோ மற்றும் உடனுடக்குடனான செய்தி தகவல் பரிமாற்றத்திற்கு இது மிக எளிமையான ஒரு சாதனமாக இருக்கிறது. விண்டோஸ் 8 சிஸ்டத்தில், இதனை விண்டோஸ் அக்கவுண்ட்டுடன் இணைத்தே செயல்படுத்த வேண்டும். மானிட்டரின் திரையில் வைத்துப் பயன்படுத்த வேண்டிய புரோகிராம் இது. இதனைத் தரவிறக்கம் செய்வதற்கும், மேலதிகத்தகவல்களுக்கும். http://apps.microsof...dc7c21263f6282b என்ற முகவரியில் உள்ள இணையதளப் பக்கத்தினைக் காணவும்.

4. கம்பெனி ஸ்டோர் (Company Store):

இது ஒரு ஓப்பன் சோர்ஸ் அப்ளிகேஷன் புரோகிராம். நம் கம்ப்யூட்டருக்குள்ளாகவே அப்ளிகேஷன் ஸ்டோர் ஒன்றை உருவாக்கி நிர்வகிக்க உதவுகிறது. விண்டோஸ் 8, விண்டோஸ் ஆர்.டி., மற்றும் தர்ட் பார்ட்டி விண்டோஸ் 8 அப்ளிகேஷன் புரோகிராம்களைப் பதிந்து வைத்து நிர்வகிக்கலாம். உள்ளாகவும், வெளியே பிறவற்றில் பதிந்து வைத்திருக்கக் கூடிய, கிடைக்கக் கூடிய இணைய அப்ளிகேஷன்களையும் இதற்குத் தொடர்பிருக்கும் வகையில் அமைக்கலாம். இதில் என்ன விசேஷம் என்றால், இந்த ஸ்டோருக்கு உங்கள் பெயர் அல்லது நிறுவனப் பெயரினைக் கொடுத்து அமைக்கலாம். இதனை மைக்ரோசாப்ட் அனுமதிக்கவில்லை. ஆனால், நம் பெயரினை நாமே அமைத்துக் கொள்ளும் வகையில் இந்த புரோகிராம் வசதி தருகிறது. இதனைப் பெற http://apps.microsof...s8companystore/ 9b22e9ba50cc4e0c8aa6c84d351c4ddb என்ற முகவரியில் உள்ள இணைய தளம் செல்லவும் .


xegRzLS.png?1

Why The Recent For Computer Crashes..?


Recent's Of Computer Crashes 


Mu1DnBD.jpg



கம்ப்யூட்டர் கிராஷ் -ஆகி நீல வண்ணத்தில் திரை மாறிவிடும், அல்லது அப்படியே திரைக்காட்சி முடங்கிப் போய்விடும். 

கம்ப்யூட்டரில் பல பாகங்கள் ஒன்றிணைந்து இயங்குகின்றன. சில வேளைகளில் இவற்றுக்குள் பிரச்சனை வந்தால் இயங்குவது நின்று போகும். ஒவ்வெரு சாதனமும் ஒரு வழியை மேற்கொண்டு அதன் மூலம் தன் இயக்கத்தை மேற்கொள்ளும். இதில் ஒரே வழியை இரு சாதனங்கள் (பிரிண்டர், கீ போர்டு / மவுஸ்) எடுத்துக் கொள்ளும்போது இயக்கம் நின்றுபோகும். 

இவ்வாறு ஏற்படுகையில் start -> settings -> control panel -> system -> Device manager எனச் சென்று பார்த்தால், பிரச்சனை ஏற்பட்ட சாதனத்தின் பெயர் முன்னால் ஒரு மஞ்சள் நிற ஆச்சரியக்குறி தோன்றும். டிவைஸ் மேனேஜரில், கம்ப்யூட்டர் என்பதில் கிளிக் செய்து பார்த்தால், இந்த சேனல் வழிகளுக்கான ஐ-ஆர்-க்யூ என காட்டப்படும். ஒரே எண் இருமுறை இருப்பின் பிரச்சனை அங்குதான் உள்ளது என்று பொருள். இதற்குத் தீர்வு என்ன? பிரச்சனைக்குரிய சாதனத்தை அன்இன்ஸ்டால் செய்து மீண்டும் இன்ஸ்டால் செய்தால் போதும்

ராம் மெமரியை உயர்த்துவதற்காகப் புதிய ராம் சிப் ஒன்றை இணைத்திருப்பொம். ஆனால், ஒன்றுக்கொன்று வேறுபாடான வேகம் உள்ளவையாக அவை இருக்கலாம். அவற்றிற்கிடையே இணைந்து செல்லும் நிலை ஏற்படாதபோது Fatel expection errorஏற்படலாம். இதனை கம்ப்யூட்டர் பாகங்களின் இயக்கம் தெரிந்தவர்கள் மூலம், பயாஸ் செட்டிங்ஸ் திறந்து, ராம் Waitstate நிலையைச் சற்று உயர்த்தலாம், அல்லது ஒரே மாதிரியான வேகத்தில் இயங்கும் சிப்களை அமைக்கலாம். 

ஹார்ட் டிஸ்க்கின் ஒழுங்கு நிலை கலையத் தொடங்கும். தேவையற்ற தற்காலிக பைல்கள் தேங்கும். பைல்கள் சிதறியபடி சேமிக்கப்படும். இதனால் இயக்க வேகத்திற்கு ஹார்ட் டிஸ்க் இணையாக இயங்க முடியாமல் போகும். அப்போது கிராஷ் ஆக வாய்ப்புண்டு. எனவே அடிக்கடி ஹார்ட் டிஸ்க்கினைச் சுத்தப்படுத்த வேண்டும். சி டிரைவில் தங்கும் தேவையற்ற பைல்களை அதற்கான புரோகிராம்களை கொண்டு நீக்கலாம். 


 

வீடியோ கார்ட்:


Vo8k1B0.jpg?1
சில வேளைகளில் கிராஷ் ஆகும்போது Fatel OE expection and VXD errors என்ற செய்தி கிடைக்கும். இது வீடியோ கார்டினால் ஏற்படுவது. இதனை தவிர்க்க வீடியோ டிஸ்பிளேமின் ரெசல்யூகளைக் குறைக்கவும், start settings control panel Display settings எனச் சென்று ஸ்கிரீன் ஏரியா பாரினை இடது மூலையில் நிறுத்தவும், அதே போல் கலர் செட்டிங்ஸ் சென்று 16 பிட் என்ற அளவில் அமைக்கவும். 
 


வைரஸ்:
 

ZcsxiVy.jpg?1


பெரும்பாலான கம்ப்யூட்டர் கிராஷ்களுக்கு வைரஸ்களே காரணம். சரியான ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்றை நிறுவி, அப்போது அதனை அப்டேட் செய்வது மட்டுமே இதனை தடுக்கும். பல வைரஸ்கள் பூட் செக்டாரைக் கொடுத்து வைக்கும். இதனால் கம்ப்யூட்டரை இயக்கவே முடியாது. எனவே, இது போன்ற நிலையில் கை கொடுக்க விண்டோஸ் ஸ்டார்ட் அப் டிஸ்க் ஒன்றை உருவாக்கி கைவசம் வைத்துக்கொள்ளுங்கள். 

 

பிரிண்டர்:

4dol4w6.jpg
 
பல வேளைகளில் கம்ப்யூட்டர்கள் பிரிண்ட் எடுக்கையில் கிராஷ் ஆவதை நீங்கள் கவனித்திருக்கலாம். இதற்கு காரணம் பிரிண்டர்களில் மிகவும் குறைந்த அளவில் பபர் மெமரி இருப்பதே காரணம். மேலும், கம்ப்யூட்டரிக் சிபியு சக்தியை பிரிண்டர்கள் சற்று அதிகமாகவே பயன்படுத்தும். 

எனவே பல வேளைகளுடன் பிரிண்டிங் வேலையை மேற்கொள்கையில், அல்லது அதிகமான அளவில் பிரிண்டருக்கு டேட்டாவினை அனுப்புகையில் கிராஷ் ஏற்படும். நாம் சாதாரணமாக காணாத கேரக்டர்களை பிரிண்டர் அச்சிட்டால் இந்த பிரச்சனை தலை தூக்குகிறது என்று பொருள். உடனே பிரிண்டருக்கு செல்லும் மின்சாரத்தை 10 விநாடிகளுக்கு நிறுத்தி பின் மீண்டும் இயக்கவும். 

 

சாஃப்ட்வேர்:


mPQUdYi.png

முழுமையாக இல்லாமல் அல்லது மோசமாக இன்ஸ்டால் செய்யப்பட்ட சாஃப்ட்வேர் தொகுப்புகளால், கம்ப்யூட்டர் கிராஷ் ஆகலாம். இவற்றை சரியாக அன்இன்ஸ்டால் செய்திட வேண்டும். இல்லையேல் இவை தொடர்பான வரிகள், ரெஜிஸ்ட்ரியில் இருந்து கொண்டு இந்த சாஃப்ட்வேரினை இயக்குகையில் கம்ப்யூட்டரை கிராஷ் ஆகும் நிலைக்கு கொண்டு வரலாம். 

ரெஜிஸ்ட்ரியைச் சுத்தம் செய்திடவென வடிவமைக்கப்பட்ட புரோகிராம்களைக் கொண்டு அதனைச் சரி செய்திட வேண்டும். இல்லையேனில் மீண்டும் விண்டோஸ் இயக்கத்தினை இன்ஸ்டால் செய்திட வேண்டியதிருக்கும். 

இப்போது வருகின்ற சிபியுக்கள் மீது சிறிய மின் விசிறிகள் பொருத்தப்பட்டு சிபியு இயக்கத்தின் போது உருவாகும் வெப்பம் வெளிக்கடத்தப்படுகிறது. சிபியு அதிக சூடானாலும், அதிக குளிர்ச்சியினால் பாதிக்கப்பட்டாலும், கெர்னல் ஏரர் (Kernal error) என்று ஒரு பிரச்சனை ஏற்படும். பொதுவாக எந்த வேகத்தில் ஒரு சிபியு இயங்க வேண்டுமோ அதனை காட்டிலும் அதிக வேகத்தில் இயங்கும் வகையில், சிபியு செட் செய்யப்பட்டருந்தாலும் அதிக வெப்ப பிரச்சனை ஏற்படும். எனவே சிபியு விண் வேகத்தினை பயாஸ் செட்டிங்ஸ் சென்று குறைக்க வேண்டும். 

கம்ப்யூட்டருக்கு செல்லும் மின் ஒட்டத்தினை சீராகத் தரும் சாதனங்களை கொண்டு தராவிட்டால், கிராஷ் ஆகும் வாய்ப்புகள் அதிகம் உண்டு. 

How To Find The Virus Infection Of Your Computer..?


ஆம், உங்கள் கம்ப்யூட்டரை வைரஸ் தாக்கிவிட்டது என்பதனை எப்படி அறிந்து கொள்வது? ஏனென்றால், உங்கள் கம்ப்யூட்டர் வைரஸின் பிடிக்குள் வந்தவுடன், நம் கம்ப்யூட்டர் செயல் இழக்காது. படிப்படியாக கம்ப்யூட்டரின் செயல்பாடுகள் முடக்கப்படும். நம் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டு, வைரஸ் புரோகிராமினை அனுப்பிய சர்வருக்கு அவை கொண்டு செல்லப்படும். இறுதியில் மொத்தமாக முடக்கப்படும்போது நம்மால் ஒன்றும் செய்திட இயலாத நிலை ஏற்பட்டுவிடும்.


நம் கம்ப்யூட்டரில் தான் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் உள்ளதே? பின் எப்படி வைரஸ் தாக்க முடியும் என்ற எண்ணம் எல்லாம் இப்போது நம்பிக்கை தர முடியாது. எந்த வளையத்தை உடைத்துக் கொண்டு வைரஸ் மற்றும் மால்வேர் புரோகிராம்கள் கம்ப்யூட்டரைத் தாக்கும் என யாரும் கணித்துச் சொல்ல முடியவில்லை. எனவே, நாம் தான் விழிப்பாக இருந்து, வைரஸ் தாக்கிய அறிகுறிகள் தெரிந்தால், உடனே சில பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அப்படிப்பட்ட அறிகுறிகள் என்ன; அவை தெரிந்தால் என்ன செய்திட வேண்டும் என்பதனை இங்கு காணலாம்.


KAmtWgq.jpg

இப்போது நாம் பயன்படுத்தும் ஆண்ட்டி மால்வேர் புரோகிராம்களும் இதனையே செய்கின்றன. நம் சிஸ்டம் வழக்கத்திற்கு மாறான வழிகளில் செயல்படுகிறதா என்பதனைக் கண்காணிக்கின்றன. இந்த செயல்பாடுகள் ஆங்கிலத்தில் heuristics என அழைக்கப்படுகின்றன. முற்றிலும் மாறான இயக்க வழிகள் தென்படுகையில், இந்த ஆண்ட்டி மால்வேர் புரோகிராம்கள் இயங்கி, புதிதாக வந்திருக்கும் மால்வேர் புரோகிராமின் தன்மை, செயல்பாடு ஆகியவற்றைக் கண்டறிந்து நமக்கு தகவல் தருகின்றன. இவை பாதுகாப்பு வழிகளை எப்படி தகர்த்தன என்று அறிந்து, அதற்கான புதிய பாதுகாப்பு வளையங்கள், பேட்ச் பைல் என்ற பெயரில் நமக்குத் தரப்படுகின்றன. இந்த வழக்கத்திற்கு மாறான இயக்க செயல்பாடுகளே, நமக்கு நம் கம்ப்யூட்டரில் மால்வேர் அல்லது வைரஸ் புரோகிராம்கள் இயங்கத் தொடங்கியுள்ளன என்பதற்கான அறிகுறிகள். அவற்றைப் பார்க்கலாம்.

 

போலியான ஆண்ட்டி வைரஸ் தகவல்கள்: 


qRC6pTh.gif



திடீரென நம் கம்ப்யூட்டரில் வைரஸ் தாக்கம் இருப்பதாகவும், உடனடியாக கம்ப்யூட்டர் முழுமையும் ஸ்கேன் செய்யப்பட வேண்டும் என பிரபலமான ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள், அல்லது நாம் பயன்படுத்தும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களின் நிறுவனங்கள் பெயரில் நமக்கு அஞ்சலில் செய்திகள் வரும். ஸ்கேன் செய்திட நம்மைத் தூண்டி, தயாராக யெஸ் பட்டன் ஒன்று தரப்படும். இதில் கிளிக் செய்தால், கம்ப்யூட்டர் ஸ்கேன் செய்யப்படுகிறது என்ற போர்வையில், வைரஸ் அல்லது மால்வேர் புரோகிராம் தன் முழு செயல்பாட்டினை மேற்கொண்டு, கம்ப்யூட்டரை முடக்கிவிடும். அல்லது, கம்ப்யூட்டரைப் பல வைரஸ்கள் பாதித்துள்ளதாகப் பட்டியலிட்டு, இவற்றை நீக்க, இன்னொரு ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினை வாங்கிக் கொள்ளுங்கள்.


விலை மலிவு தான் எனக் கூறி, அதனை வாங்கிட நீங்கள் சம்மதிக்கும் நிலையில், உங்கள் கிரெடிட் கார்ட், வங்கி அக்கவுண்ட் எண் ஆகியவற்றை வாங்கிக் கொள்ளும். பின் புதிய வைரஸ் புரோகிராம் பதியப்பட்டுள்ளதாகவும், வைரஸ்கள் அனைத்தும் நீக்கப்பட்டுவிட்டதாகவும் காட்டப்படும். ஆனால், உங்களிடம் இருந்து பெறப்பட்ட வங்கி மற்றும் கிரெடிட் கார்ட் பதிவுகளைப் பயன்படுத்தி, உங்கள் பணம் திருடப்படும். சில நாட்கள் இடைவெளியில்தான், பொதுவாக, நாம் வங்கிக் கணக்கினைப் பயன்படுத்துவதால், இந்த மோசடியை நாம் அறியும்போது, நம் பணம் மொத்தமாகத் திருடப்பட்டிருக்கும்.

இவ்வாறு நமக்குப் போலியான செய்திகள் காட்டப்பட்டால், உடனே கம்ப்யூட்டரில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் நம் பைல்களை சேவ் செய்து, இயக்கத்தை நிறுத்தி, மின்சக்தியையும் நிறுத்தவும். அடுத்து, கம்ப்யூட்டரை சேப் மோடில் இயக்கவும். நெட்வொர்க் மற்றும் இணைய இணைப்பினை நீக்கவும். அடுத்து, அண்மையில் நீங்கள் இன்ஸ்டால் செய்த புரோகிராம் அல்லது புரோகிராம்களை உடனடியாக அன் இன்ஸ்டால் செய்திடவும். அவற்றின் வழியாகத்தான் இந்த மால்வேர் அல்லது வைரஸ் புரோகிராம் கம்ப்யூட்டருக்குள் நுழைந்திருக்கும். இந்த புதிய புரோகிராம்களை நீக்கிய பின்னர், கம்ப்யூட்டரை ரெஸ்டோர் பாய்ண்ட் ஒன்றுக்குக் கொண்டு சென்று இயக்கவும். ரெஸ்டோர் செய்யப்படும் நாள், இந்த புதிய புரோகிராம்களை இன்ஸ்டால் செய்த நாளுக்கு முன்பிருந்தால் நல்லது. ரெஸ்டோர் செய்த பின்னர், வழக்கம் போல கம்ப்யூட்டரை இயக்கி, நீங்கள் பயன்படுத்தும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் மூலம், கம்ப்யூட்டரை ஸ்கேன் செய்திடவும். மால்வேர் புரோகிராமின் மிச்ச மீத நச்சு நடவடிக்கைகளுக்கான பைல்கள் இருப்பின் அவை கண்டறியப்படும். அவற்றை நாம் அழித்துவிடலாம்.



தேவையற்ற பிரவுசர் டூல்பார்கள்:

EUZG8IB.jpg?1



 நம் பிரவுசரில் திடீரென நாம் இன்ஸ்டால் செய்திடாமலேயே, புதிய டூல்பார்கள் காட்சி அளிக்கும். நாம் “இது எப்படி வந்தது?” என்ற எண்ணத்துடன், அவற்றை அலட்சியப்படுத்தித் தொடர்ந்து செயல்படுவோம். இந்த டூல் பார்கள், நல்லதொரு நிறுவனத்தின் உண்மையான புரோகிராம் என்பதை உங்களால் உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் என்றால், அது உங்களுக்குத் தேவை எனில், தொடர்ந்து வைத்துக் கொண்டு பயன்படுத்தவும். இல்லை எனில், அதனை உடனடியாக, முழுமையாக நீக்குவதே நல்லது. ஏனென்றால், இதுவும் மால்வேர் புரோகிராமின் ஒரு அவதாரமாகவே இருக்கும். பொதுவாக, டூல்பார்களை நீக்க அனைத்து பிரவுசர்களும் வழிகளைக் கொண்டுள்ளன. அவற்றை இயக்கி, இன்ஸ்டால் செய்யப்பட்ட டூல் பார்களில் இது இருந்தால், உடனடியாக நீக்கவும். ஆனால், பட்டியலில் இது இல்லை என்றால், நிச்சயம் இது மால்வேர் என்பது உறுதியாகிறது. மற்ற வழிகள் மூலம் இதனை நீக்கலாம்.

 

இணையத்தில் மாற்று வழி செல்லத் தூண்டுதல்: 




பல வேளைகளில், இணையத்தில் நாம் இயங்கிக் கொண்டிருக்கையில், வேறு ஒரு இணையதளம் செல்லுமாறு நாம் தூண்டப்படுவோம். கம்ப்யூட்டரை ஹேக் செய்திடுபவர்கள் பலர் இதனைத் தங்கள் வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர். இவ்வாறு மாற்றுவழிப் படுத்தி, குறிப்பிட்ட இணைய தளத்தைப் பார்ப்பதற்காக நாம் ஏற்படுத்தும் ஒவ்வொரு கிளிக் செயல்பாட்டிற்கும், அவர்களுக்குப் பணம் கிடைக்கும். இது போன்ற நிகழ்வுகளும், போலியான டூல்பார்களால் மேற்கொள்ளப்படும். எனவே மேலே சொன்ன வழிகளைப் பின்பற்றி இந்த டூல் பார்களை நீக்கவும்.

 

பாப் அப் செய்திகள்: 


zfv4LD7.jpg



சில இணைய தளங்களைப் பார்வையிடுகையில், திடீர் திடீரென ஏதேனும் பாப் அப் செய்திக் கட்டங்கள் காட்டப்பட்டு, அதில் தரப்படும் தகவல்கள், நம்மை சில லிங்க்குகளில் கிளிக் செய்திடக் கேட்டுக் கொள்ளும். சர்வே எடுப்பதாக்க் கூறிக் கொண்டு, நம்மைப் பற்றிய தனிநபர் தகவல்களை கேட்டு வாங்கும். சர்வேயில் கலந்து கொண்டால், ஆப்பிள் ஐபோன் கிடைக்கும் வாய்ப்பு உண்டு என்று நமக்கு ஆசை காட்டும். இது போன்ற செய்திகளை உருவாக்கித் தருவதும் சில டூல்பார்களே. எனவே, மேலே காட்டியுள்ளபடி, இந்த புதிய டூல்பார்களை நீக்குவதே, இதிலிருந்து தப்பிக்கும் வழியாகும்.



நண்பர்களுக்கு உங்கள் பெயரில் அஞ்சல்: 


eVOKrDP.png




உங்கள் மின் அஞ்சல் முகவரியிலிருந்து, உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் அஞ்சல் செல்லும். அதில் நீங்கள் வெளிநாடுவந்திருப்பதாகவும், பணம் முழுவதையும் தொலைத்து விட்டு திண்டாடிக் கொண்டிருப்பதாகவும் செய்தி இருக்கும். அந்த நாட்டு வங்கிக் கணக்கு ஒன்று தரப்பட்டு, அதில் பணம் செலுத்தி உதவும்படி தகவல் தரப்படும். இப்படிப்பட்ட அஞ்சல்கள் அனுப்பப்பட்டால், உங்கள் கம்ப்யூட்டரின் கட்டுப்பாடு, வைரஸ் வசம் சென்றுவிட்ட்து என்று உறுதியாகக் கூறலாம்.


சில வேளைகளில், இத்தகைய அஞ்சல்களில், அனுப்பியவரின் பெயராக உங்கள் பெயர் இருக்கும். ஆனால், அனுப்பிய அஞ்சல் முகவரி உங்களுடையதாக இருக்காது. அதனைப் பார்த்து நாம் இது போலி என அறிந்து கொள்ளலாம். அவ்வகையில், அஞ்சல் முகவரி வேறாக இருந்தால், உங்கள் கம்ப்யூட்டர் பாதிக்கப்படவில்லை; ஆனால், அஞ்சல் முகவரிகள் திருடப்பட்டுப் பயன்படுத்தப்படுகின்றன என்று உணர்ந்து கொள்ளலாம். உங்கள் நண்பர்கள் நிச்சயம் அஞ்சல் வழியாகவோ, அல்லது தொலைபேசி வழியாகவோ தொடர்பு கொண்டு, இது குறித்துக் கூறுவார்கள். உடனே விழித்துக் கொண்டு, உங்கள் கம்ப்யூட்டரை முழுமையாக ஸ்கேன் செய்திடவும். தேவையற்ற இன்ஸ்டால் செய்யப்பட்ட புரோகிராம்களை அழிக்கவும். டூல்பார்களையும் நீக்கவும்.
 

இணைய பாஸ்வேர்ட் மாற்றம்: 

இணைய இணைப்பிற்கு மற்றும் சில இணைய தளங்களுக்கு நாம் பயன்படுத்தும் பாஸ்வேர்ட்கள் திடீரென மாற்றப்பட்டிருக்கும். நம்மால், இந்த சேவை எதனையும் பயன்படுத்த முடியாது. இது எப்போது நடக்கும்? இதற்குக் காரணம் நீங்களாகத்தான் இருப்பீர்கள். உங்களுக்கு இந்த சேவையை வழங்கும் நிறுவனத்தின் பெயரில் உங்களுக்கு அஞ்சல் ஒன்று வந்திருக்கும். அதில், அனைத்து சந்தாதாரர்களின் பதிவுகள் அனைத்தும் புதுப்பிக்கப் படுவதாகவும், அதற்காக உங்களுடைய யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட்களைத் தரவும் என்று கேட்கப்படும். அதனை உண்மை என நம்பி, நீங்களும் தந்திடுவீர்கள். இவற்றைப் பெற்ற அந்த தீயவர்கள், உங்கள் இணைய சேவை மற்றும் தளங்களுக்கான பாஸ்வேர்ட்களை முற்றிலுமாக மாற்றி, உங்களை அலைக்கழிப்பார்கள். அல்லது குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் பணம் செலுத்தும்படி கேட்டுக் கொள்வார்கள். நீங்கள் பணம் செலுத்தியவுடன், பணத்தை எடுத்துக் கொண்டு, வங்கிக் கணக்கைத் தொடராமல் விட்டுவிடுவார்கள்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், நீங்கள் தொடர்பு கொள்ளும் நண்பர்கள் அனைவருக்கும், உங்கள் இணைய சேவை பாதிக்கப்பட்டிருப்பதனை அறிவிக்கவும். ஏனென்றால், அவர்களுக்கு உங்கள் யூசர் அக்கவுண்ட்டிலிருந்து போலியான தகவல்கள் அனுப்பப்படலாம். அடுத்து, உங்களுக்கு இணைய சேவை வழங்கும் நிறுவனத்திடம், உங்கள் அக்கவுண்ட் முடக்கப்பட்டிருப்பதனை அறிவித்து, அதனை முடக்கி, பின் மீண்டும் நீங்கள் பயன்படுத்தும் வகையில் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டினைப் புதியதாக அமைக்கும் வசதியைக் கேட்டுப் பெறவும். பெரும்பாலான இணைய சேவை நிறுவனங்கள் இது போன்ற அவசர உதவியை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு, நமக்கு உதவும்.

பொதுவாக, இணைய தளங்கள் இது போன்ற தகவல்களைக் கேட்டுப் பெறுவதில்லை. எனவே, யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் கேட்கப்பட்டால், அந்த தளத்தினை, அஞ்சலில் தரப்பட்ட லிங்க் வழி அணுகாமல், நேரடியாக இணையம் வழி அணுகி, அப்படிப்பட்ட தகவல் தரப்பட்டுள்ளதா என்பதனை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

How To Find The Virus Infection Of Your Computer..?



மவுஸ் பாய்ண்ட்டர் தானாகச் செயல்படுதல்:


TLqMY30.gif



 சில ஆப்ஷன்களைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நிலையில், உங்கள் மவுஸ் பாய்ண்ட்டர் தானாக நகர்ந்து சென்று, சில ஆப்ஷன்களைத் தேர்ந்தெடுக்கும் வகையில் செயல்பட்டால், நீங்கள் வைரஸ் புரோகிராமினால் மாட்டிக் கொண்டீர்கள் என்பது உறுதியாகிறது. பொதுவாக ஹார்ட்வேர் பிரச்னை ஏற்பட்டால், மவுஸ் தாறுமாறாகச் செயல்படும். ஆனால், இவ்வாறு ஆப்ஷன் ஒன்றினைத் தேர்ந்தெடுக்கும் வகையில் செயல்பட்டால், அது நிச்சயம் வைரஸ் புரோகிராமின் வேலையாகத்தான் இருக்கும். இவை பெரும்பாலும், சில புரோகிராம்களையே இன்ஸ்டால் செய்திடும். நாம் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தாமல் விட்டு வைத்திருக்கையில், அதனை இயக்கும். அப்படிப்பட்ட ஒரு நிகழ்வைப் பார்க்க நேர்ந்தால், கம்ப்யூட்டரில் என்ன நடக்கிறது என்று கண்காணிக்கவும்.

பின்னர், ரெஸ்டோர் வழியில் சென்று, கம்ப்யூட்டரைச் சரிப்படுத்தவும். அதற்கு முன்பாக, இன்னொரு கம்ப்யூட்டர் மூலம், உங்கள் அனைத்து யூசர்நேம் மற்றும் பாஸ்வேர்ட்களை மாற்றவும். நிதி இழப்பு ஏற்பட்டிருந்தால், உடனடியாக காவல் துறைக்குத் தெரியப்படுத்தி, சைபர் கிரைம் பிரிவு வழியாகத் தீர்வு காணவும். வங்கிக் கணக்கின் இணைய சேவையினை நிறுத்தி வைக்குமாறு, வங்கிக்கு கடிதம் தரவும்.

 

எதிர்பாராத சாப்ட்வேர் பதிவு: 




கம்ப்யூட்டரில் நாம் எதிர்பாராத நிலையில் புதிய சாப்ட்வேர் தொகுப்பு ஒன்று பதியப்பட்டுள்ளதாகத் தெரிகிறதா? நிச்சயமாக, அது வைரஸ் புரோகிராமின் வேலையாகத்தான் இருக்கும். அல்லது, நீங்கள் பதிந்த புரோகிராம் நிறுவனமே, இது போன்ற வேவு பார்க்கும் புரோகிராமினை பதிந்து வைக்கும். நீங்கள் பயன்படுத்திய முதல் புரோகிராமினைப் பதிகையில் தரப்படும் நிபந்தனைகளில், இது போன்ற தேவைப்படும் புரோகிராமினைக் கம்ப்யூட்டரில் பதிவதற்கான அனுமதியை, நீங்கள் அறியாமலேயே பெற்றிருக்கும்.



செயல் இழக்கும் ரெஜிஸ்ட்ரி எடிட்டர், டாஸ்க் மானேஜர்: 




நம் கம்ப்யூட்டரில் இயங்கும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம், ரெஜிஸ்ட்ரி எடிட்டர், டாஸ்க் மானேஜர் ஆகியவற்றை நாம் அணுக முடியாமல் உள்ளதா? அல்லது அவை செயல் இழந்து உள்ளனவா? நிச்சயமாக, கம்ப்யூட்டர் நம் கட்டுப்பாட்டினை விட்டுப் போய்விட்டது. உடனடியாக, கம்ப்யூட்டரை சேப் மோடில் இயக்கி, மேலே தரப்பட்டுள்ள அனைத்து வழிகளையும் மேற்கொள்ளவும். பின்னர், ரெஸ்டோர் வழியாகக் கம்ப்யூட்டரை முந்தைய நாள் ஒன்றுக்குக் கொண்டு செல்லவும். இதனை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.


வங்கிக் கணக்கில் பணம் குறைகிறது: 


நிச்சயமாய் நம் இணைய வழி வங்கி சேவையினைப் பயன்படுத்தி, ஹேக்கர் செய்திடும் வேலை தான் இது. பெரும்பாலும், நம் அக்கவுண்ட்டில் உள்ள அனைத்தும் காலி செய்யப்பட்டிருக்கும். வெளிநாட்டு வங்கி மூலம், அந்நாட்டுக் கரன்சிக்கு மாற்றி உங்கள் பணம் எடுக்கப்பட்டிருக்கும். 

உடனடியாக, வங்கி, காவல் துறைக்கு இதனைத் தெரியப்படுத்தி, உடனடி நடவடிக்கைக்குக் கேட்டுக் கொள்ள வேண்டும். சில வங்கிகள், இது போன்ற நிகழ்வுகளில், நமக்கு இழப்பீடு தரும் வகையில் பாதுகாப்பு திட்டங்களை மேற்கொண்டிருக்கும். இருந்தாலும், எச்சரிக்கை நடவடிக்கை தேவை.


இணையக் கடைகளிலிருந்து குற்றச் சாட்டு:


சில வர்த்தக் இணைய தள நிறுவனங்களிடமிருந்து நீங்கள் வாங்கிய பொருட்களுக்கு ஏன் இன்னும் பணம் செலுத்தவில்லை; தவணைப் பணம் செலுத்தவில்லை என அஞ்சல் மற்றும் கடிதங்கள் வரும். நிச்சயமாய், உங்கள் கம்ப்யூட்டர் கைப்படுத்தப்பட்டு, அதன் மூலம், மிகப் பெரிய அளவில் பொருட்கள் வாங்கப்பட்டு, அவை உங்கள் வீட்டு முகவரிக்கு அனுப்பப்படாமல், வேறு ஒரு முகவரிக்கு அனுப்பப் பட்டிருக்கும். இது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிற ஒரு செயலாக இருக்கும். முதலில், இணைய தள நிறுவனத்தில் நம்பிக்கையை உருவாக்கி, பின்னர், மொத்தமாக நம் அக்கவுண்ட்டில் பொருட்களை வாங்கி இருப்பார்கள். சில இணைய தளங்கள், தவணை முறையிலும் பொருட்களைத் தருவதால், இந்த ஏமாற்று வேலை, திருடர்களுக்கு எளிதாகிறது. இது தெரிந்தவுடன், உடனடியாக வங்கி இணைய சேவையின் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டினை மாற்றவும். வங்கி, காவல்துறைக்கு தெரியப்படுத்தி, நடவடிக்கை எடுக்கச் சொல்லவும்.

மேலே சொல்லப்பட்ட திருட்டு நடவடிக்கைகள் மூன்று கட்டமைப்புகள் மூலமாக மேற்கொள்ளப்படுகின்றன. அவை, சரி செய்யப்படாத பிழைக் குறியீடுகள் கொண்ட சாப்ட்வேர் புரோகிராம், ட்ரோஜன் ஹார்ஸ் வைரஸ் புரோகிராமினை இயக்குதல் மற்றும் திருட்டு மின் அஞ்சல்களுக்கு உடன்பட்டு செயல்படுதல் ஆகும். இந்த மூன்று விஷயத்திலும் நாம் சற்றுக் கவனமாக இருந்தால், நம் கம்ப்யூட்டர் முடக்கப்படுவதனை, நம் பணம் திருடப்படுவதனைத் தடுக்கலாம். நமக்கு இதெல்லாம் நடக்காது என்று மெத்தனமாக இல்லாமல், தொடர்ந்து விழிப்புடன் இருப்பதே, இத்தகைய நிலைகளைத் தடுக்கக் கூடிய வழிகளாகும்.

Computer Mouse Tips


Computer Mouse Tips


zjVFck0.jpg?1



கணனி பயன்படுத்தும்போது மவுஸ் பற்றிய முழுமையான பயனை நாம் அறிந்துகொள்வதில்லை.

குறிப்பிட்ட சில பணிகளுக்கு மட்டுமே மவுஸ் என எண்ணிக் கொண்டு, அதன் பல வசதிகளை அனுபவிக்காமல் விட்டுவிடுகின்றனர்.

இதோ அதன் பயன்கள்:

பெரும்பாலான டெக்ஸ்ட் எடிட்டர்களும் புரோகிராம்களும், மொத்த டெக்ஸ்ட் அல்லது நாம் தேர்ந்தெடுக்கும் டெக்ஸ்ட்டினை ஹைலைட் செய்திட,Mouse +Shift Key பயன்படுத்த இடம் தருகின்றன.

தேர்ந்தெடுக்க வேண்டிய டெக்ஸ்ட்டின் தொடக்கத்தில் கிளிக் செய்திடவும். பின்னர்,Shift Keyஅழுத்திக் கொண்டு, டெக்ஸ்ட் முடிவடையும் இடத்தில் கிளிக் செய்திடவும்.

எந்த வித மவுஸ் இழுவை இல்லாமல், ஆரோ கீ அழுத்தாமல், இப்போது நீங்கள் விரும்பும் டெக்ஸ்ட் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும்.

இந்த வகையில் Alt Key வேறு ஒரு வகையான வசதியைத் தருகிறது. ஆல்ட் கீயை அழுத்திக் கொண்டு,டெக்ஸ்ட்டின் ஊடாக மவுஸை இழுத்து ஹைலைட் செய்திடலாம்.

டேபிள் நெட்டு வரிசை, பாராவில் பாதி எனத் தேர்ந்தெடுக்கையில், இந்த பயன்பாடு அதிகம் உதவும். டாகுமெண்ட் பக்கங்களின் ஊடாகச் செல்ல, தற்போது மவுஸின் ஸ்குரோல் வீலை அனைவரும் பயன்படுத்துகிறோம்.

இந்த ஸ்குரோல் வீலை இன்னும் சில பணிகளுக்குப் பயன்படுத்தலாம். மவுஸின் ஸ்குரோல் வீல், ஒரு வீலாக மட்டுமல்ல, பட்டனாகவும் பயன்படுகிறது. மவுஸின் மூன்றாவது பட்டனாக இது செயல்படுகிறது.

இதனை அழுத்தினால், அது மவுஸின் மூன்றாவது பட்டனாகத் தனிப்பட்ட செயல்பாட்டினைத் தரும். இதனைப் பயன்படுத்தி, லிங்க் ஒன்றில் கிளிக் செய்து, இணையப்பக்கத்தினைத் திறக்கலாம்.

பிரவுசரின் மேலாக இணையதளங்களுக்கான டேப்பில் வீலை அழுத்தினால், அந்த இணைய தளம் மூடப்படும்.

இணைய தளப் பக்கம், வேர்ட் டாகுமெண்ட், எக்ஸெல் ஸ்ப்ரெட்ஷீட் போன்றவற்றில், கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு ஸ்குரோல் செய்தால், பெரிதாகவும், சிறியதாகவும் (zoom in and zoom out) காட்டப்படும்.

Shift Key அழுத்திக் கொண்டு, இணையப் பக்கங்களில், மேலும் கீழுமாக ஸ்குரோல் செய்தால், இணையப் பக்கங்களிடையே மேலும் கீழுமாகச் செல்லலாம்.

tVfoTrU.jpg?1

சில மவுஸ் வீல்களை, இடது வலதாகவும் நகர்த்தி, இணையப் பக்கத்தில் மேலும் கீழுமாகச் செல்லலாம். இரண்டு மற்றும் மூன்று முறை Click: எந்த சொல்லையும், அதன் மீது டபுள் கிளிக் செய்து தேர்ந்தெடுக்கலாம். முழு வாக்கியத்தை அல்லது பாரா முழுவதையும் தேர்ந்தெடுக்க, அதில் உள்ள ஒரு சொல்லில் மவுஸை வைத்து, மூன்று முறை கிளிக் செய்திட வேண்டும். ஒரு சொல்லில் டபுள் கிளிக் செய்து, அப்படியே இடது வலதாக இழுத்தால், ஒவ்வொரு சொல்லாக தேர்ந்தெடுக்கப்படும்

Google Chrome Browser Tips


Google Chrome Browser Tips


Kc5lqKf.png
1. பிரவுசரில் திறந்து வைக்கப்பட்டுள்ள தளங்களுக்குச்செல்ல,கீ போர்ட் வழியாக ஒரு வழி உள்ளது. முதலில், நீங்கள் விரும்பும் இணைய தளம் காட்டப்படும் டேப் எந்த இடத்தில் (1,2,3,4...) உள்ளது எனப் பார்க்கவும். பின்னர், கண்ட்ரோல் கீ அழுத்தி, அதன் இடத்திற்கான எண்ணை (Ctrl+3) அழுத்தினால், அந்த குறிப்பிட்ட டேப் உள்ள தளம் திரையில் கிடைக்கும்.


2. ஸ்பேஸ் பாரினை அழுத்தினால், எந்த இணைய தளத்திலும், தளமானது ஒரு பக்கம் கீழாகச் செல்லும் என்பதனை நீங்கள் அறிந்திருக்கலாம். இதே போல, ஷிப்ட் கீ அழுத்தி ஸ்பேஸ் பார் அழுத்தினால், அதே போல பக்கங்களைத் தாண்டிச் செல்லலாம்.


3. குரோம் அதன் எக்ஸ்டன்ஷன்களுக்குச் செல்ல ஷார்ட் கட் கீ வழிகளை அமைக்க வசதி தருகிறது. இதற்கு chrome://extensions எனச் செல்லவும். கிடைக்கும் பக்கத்தில் கீழாகச் செல்லவும்.இங்கு "Keyboard shortcuts” என்ற இடத்தில் கிளிக் செய்து, நீங்கள் விரும்பும் செயல்பாடுகளுக்கு, ஷார்ட் கட் கீகளை அமைக்கலாம்.


4. சில எக்ஸ்டன்ஷன் புரோகிராம்கள் பின்னணியில் இயங்கினாலே போதும். எனவே, ஏன் அவை பிரவுசரின் டூல்பாரில், இடம் எடுத்துக் கொண்டு தேவையற்ற வகையில் காட்டப்படுகிறது. இதனைப் போக்க, எந்த எக்ஸ்டன்ஷன் காட்டப்பட வேண்டாம் என்று எண்ணுகிறீர்களோ, அதற்கான ஐகானில், ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் கீழ்விரி மெனுவில், "Hide button” என்ற பட்டனைத் தேர்ந்தெடுத்து அமைக்கவும்.


5. எந்தவிதமான கவனச் சிதறலும் இல்லாமல், இணையப் பக்கத்தில் உலா வர, F11 என்ற கீயை அழுத்தவும். உடன், குரோம் பிரவுசர் முழு திரையிலும் காட்டப்படும். வழக்கமாகக் காட்டப்படும் பிரவுசர் சார்ந்த ஐகான்கள் மற்றும் பிற வகை தோற்றங்கள் அனைத்தும் மறைக்கப்படும்.


6. நிறைய டேப்களைத் திறந்து வைத்து, பிரவுசரைப் பயன்படுத்துபவரா நீங்கள்? இவற்றில் சிலவற்றை மறைத்து வைக்க விரும்புகிறீர்களா? பிரவுசரின் முகவரி விண்டோவில், chrome://flags என டைப் செய்திடவும். அங்கு Stacked Tabs என்பதனைத் தேடி அறியவும். அதனை இயக்கும் வகையில் enable செய்திடவும். இதனால், டேப்கள் அனைத்தும் சுருங்கி, சிறியதாகக் காட்சியளிப்பதற்குப் பதிலாக, ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டுக் காட்சி அளிக்கும்.

7. எந்த இணைய தளத்தினையும், அதன் காட்சித் தோற்றத்தினைப் பெரிதாக்கிப் (Zoom) பார்க்கலாம். பின் சுருக்கலாம். இதற்கு கண்ட்ரோல் கீ அழுத்திய நிலையில் "+” அல்லது "--” கீயினை அழுத்த வேண்டும். ஸூம் செய்யப்படும் அல்லது ஸூம் செய்த காட்சி சுருக்கப்படும். இதன் மூலம் இணைய தளப் பக்கத்தில் உள்ள எழுத்துக்களும் படங்களும் விரிக்கப்பட்டுக் காட்டப்படும்.


8. கண்ட்ரோல் + ஸீரோ (Ctrl+0) அழுத்தினால், நீங்கள் ஸும் செய்த ஸ்கிரீன், அல்லது சுருக்கிய திரை பழைய 100% நிலைக்குத் திரும்பும்.


9. நீங்கள் எப்போது விரும்பினாலும், குரோம் பிரவுசரின் தாய் முகப்புப் பக்கத்திற்குச் செல்லலாம். Alt+Home கீகளை அழுத்திப் பெறலாம். இதற்குப் பதிலாக ஹோம் பட்டன் இருந்தால், அதனை மட்டும் அழுத்திச் செல்லலாம் அல்லவா? இதனைப் பெற, chrome://settings தேர்ந்தெடுத்துச் செல்லவும். அங்கு, "Show Home button” என்று உள்ள பெட்டியில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். இனி, இதற்கான பட்டன் ஒன்று ஸ்கீரினில் காட்டப்படும்.


10. எந்த இணையதளத்திற்குமான ஷார்ட் கட் ஒன்றை, விண்டோஸ் டெஸ்க்டாப்பில் அமைக்கலாம். முகவரி கட்டத்தில் காட்டப்படும் முகவரியினை, மவுஸ் மூலம் அப்படியே இழுத்துச் சென்று, திரையில் அமைத்தால், அது, அந்த இணைய தளத்திற்கான ஷார்ட் கட் கீயாகச் செயல்படும். அப்ளிகேஷன்களுக்கு நாம் ஏற்படுத்தும் ஷார்ட் கட் கீ ஒன்றையும், இணையப் பக்கங்களுக்கு ஏற்படுத்தலாம். பிரவுசரின் மெயின் மெனுவிற்குச் செல்லவும். அங்கு Tools தேர்ந்தெடுக்கவும். இதில் "Create application shortcuts” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இனி, குறிப்பிட்ட பக்கமானது முழுமையாகத் திரை முழுவதும் காட்டப்படும். வழக்கமான பிரவுசர் சார்ந்த எதுவும் காட்டப்பட மாட்டாது.


11. பிரவுசரில் பல இணைய தளங்களைப் பார்த்துத் தேவையான தகவல்களை தேர்ந்தெடுக்கிறீர்கள். கம்ப்யூட்டரை நிறுத்தி, வேறு சில வேலைகளை முடித்து மீண்டும் திரும்ப நினைக்கிறீர்கள். பிரவுசரில் பார்த்த அனைத்து தளங்களும் அதன் டேப்களோடு உங்களுக்கு வேண்டும் என விரும்புகிறீர்கள். இதற்கு, chrome://settings செல்லவும். அங்கு, "On startup” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இதில் "Continue where I left off.” என்பதனைக் கிளிக் செய்து தேர்ந்தெடுத்து அமைக்கவும். அடுத்த முறை, குரோம் பிரவுசரை இயக்கும்போது, அதற்கு முன் இயக்கியபோது நீங்கள் பார்த்த அனைத்து இணைய தளங்களுடன், பிரவுசர் திறக்கப்படும்.

Few Unknown Sender Browsers Informations

Few Unknown Sender Browsers



இணையத்திற்கான இணைப்பினைப் பெறுவதில், நாம் அதிகம் பயன்படுத்துவது, கூகுள் குரோம், இன்டர்நெட் எக்ஸ்புளோரர், மொஸில்லா பயர்பாக்ஸ் மற்றும் ஆப்பிள் சபாரி ஆகியவையே. இவை மட்டுமே நமக்குக் கிடைக்கக் கூடிய பிரவுசர்கள் அல்ல. பாதுகாப்பாக இணையம் உலா வர இன்னும் ஐந்து பிரவுசர்கள் உள்ளன.

பாதுகாப்பாகவும், தனிப்பட்ட முறையிலும் பிரவுஸ் செய்திடும் வகையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன என்பது இன்னும் ஒரு கூடுதலான சிறப்பாகும். இந்த பிரவுசர்களின் முழு செயல்பாடும், மற்றவற்றில் தரப்படும் “private” அல்லது “incognito” நிலைக்கு இணையானவை என இவற்றைப் பயன்படுத்தியவர்கள் கூறுகின்றனர். இவற்றை இயக்குவதும் எளிதானதாகும். இவை இலவசமாகவும் கிடைக்கின்றன. இவை குறித்து இங்கு காணலாம்.

 
1. ஒயிட்ஹேட் ஏவியேட்டர் (WhiteHat Aviator): 


BmPNiME.jpg



நீங்கள் ஏற்கனவே கூகுள் குரோம் பயன்படுத்தி, பின்னர் இதனைப் பயன்படுத்தினால், இரண்டிற்கும் அவ்வளவாக வேறுபாடில்லை என எண்ணுவீர்கள். ஆம், நீங்கள் நினைப்பது சரிதான். ஏனென்றால், இரண்டும் ஒரே கட்டமைப்பில் உருவாக்கப்பட்டவை. ஏவியேட்டர் பிரவுசரை வடிவமைத்த ஒயிட் ஹேட் செக்யூரிட்டி லேப்ஸ், இந்த பிரவுசரை “இணையத்தில் மிகவும் பாதுகாப்பான பிரவுசர்” என்று அறிவித்துள்ளது. மற்ற பிரவுசர்கள் போலின்றி, இது முழுமையான பாதுகாப்பு தரும் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியே வடிவமைக்கப்பட்டுள்ளது. பயனாளருக்குத் தேவையான தனிநபர் பயன்பாட்டிற்கான அனைத்து ப்ளக் இன் புரோகிராம்களும், பிரவுசருடனேயே தரப்பட்டுள்ளன. எனவே, பாதுகாப்பிற்கென நாம் எதுவும் கூடுதலாக முயற்சிகள் எடுக்கத் தேவை இல்லை. இதில் கூகுள் குரோம் பிரவுசருக்கான எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களையும் இணைத்துப் பயன்படுத்தலாம். ஏனென்றால், இரண்டிலும் ஒரே சோர்ஸ் கோட் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் குரோம் போலின்றி, இது குக்கீஸ் பைல்களை, விளம்பர நெட்வொர்க், ஹேக்கர்கள் மற்றும் வைரஸ் புரோகிராம்கள் பின்பற்றுவதனைத் தடுக்கிறது. இவ்வளவு வேலைகளை ஒரே நேரத்தில் மேற்கொண்டாலும், இது வேகமாகச் செயல்படுகிறது. நமக்கு விருப்பமான இணைய தளங்களை விரைவாக நமக்குப் பெற்றுத் தருகிறது.

இதனைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய இணைய முகவரி: https://www.whitehatsec.com/aviator/

 

2. மேக்ஸ்தான் க்ளவ்ட் பிரவுசர்: 

BTkPghi.jpg?1




இந்த பிரவுசர், அனைத்து ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும் இயங்கும் வகையில், வடிவமைக்கப்பட்டுக் கிடைக்கிறது. மொபைல் போனுக்கான வடிவமும் இதில் அடக்கம். இதனைத் தயாரித்த நிறுவனம், தன் வாடிக்கையாளர்களுக்கு க்ளவ்ட் சேவையை வழங்கி, பைல்களை சேவ் செய்திட இடம் தருகிறது. பைல்கள் மட்டுமின்றி, நாம் விரும்பும் இணைய தள முகவரிகள் (favorites), நம்மைப் பற்றிய தனிநபர் தகவல்கள், பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டிய தகவல்கள் ஆகியவையும் சேவ் செய்யப்படுகின்றன. இது மற்ற எந்த பிரவுசரிலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பிரவுசர் தானாகவே இயங்கி, கெடுதல் விளைவிக்கும் இணைய தளங்களுக்கு நாம் செல்வதைத் தடுக்கிறது. அவற்றைத் திறக்கும் முன்னர், அந்த தளங்களை ஸ்கேன் செய்து, அவை பாதுகாப்பானவை என்று உறுதி செய்த பின்னரே, நம்மை அனுமதிக்கிறது. பிரவுசரின் கூடுதல் செயல்பாடுகளுக்கென, இந்த பிரவுசரிலேயே சில எக்ஸ்டன்ஷன் புரோகிராம்கள் கிடைக்கின்றன. இவற்றைத் தேவை இருந்தால், நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். நாம் பிரவுஸ் செய்திடும் தளம் குறித்த தகவல்கள் ஸ்டோர் செய்வதனைத் தடுக்க, private ஆகவும் இதில் பிரவுஸ் செய்திடலாம். மேக்ஸ்தான் பிரவுசரில் தரப்படும் snapshot வசதியை அனைத்துப் பயனாளர்களும் விரும்புவார்கள். ஒரே தளத்தை, ஒரே நேரத்தில், பல இடங்களில் திறந்து பயன்படுத்தும் வசதி, விளம்பரங்களைத் தடுக்க Ad Hunter என்னும் வசதி போன்றவையும் குறிப்பிடத்தக்க வசதிகளாகும்.

இதனைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி: http://www.maxthon.com/ 
 


3. ஆப்பரா பிரவுசர் (Opera): 


EBhIb0z.png?1



மேலே சொல்லப்பட்ட மேக்ஸ்தான் பிரவுசர் போல, ஆப்பரா பிரவுசரும், டெஸ்க்டாப் மற்றும் மொபைல் சாதனங்களில் பயன்படுத்த தனித்தனியே வடிவமைக்கப்பட்டு கிடைக்கிறது. தேடல் சாதனங்களைப் பயன்படுத்துகையிலும், சமூக இணைய தளங்களில் இயங்குகையிலும், நம் தேடல்களை வேறு புரோகிராம்கள் பின்பற்றுவதனை இது தானாகவே தடுக்கிறது. இதன் செயல்பாட்டு வேகம் எப்போதும் வேகமாகவே இருக்கிறது. நம் இணைய இணைப்பு சற்று குறைந்த வேகத்தில் செயல்படுகையில், இதில் உள்ள Turbo வசதி, நம் செயல்பாட்டினை வேகமாக மேற்கொள்ள உதவுகிறது. மொபைல் சாதனங்களில் ஆப்பரா பயன்படுத்துகையில், டேட்டாவினை சேவ் செய்திடும் வசதி இதில் கிடைக்கிறது. பயனாளர் விருப்பப்படி ஆப்பராவினை வடிவமைக்க, அதிகமான எண்ணிக்கையில் எக்ஸ்டன்ஷன் புரோகிராம்கள் இந்த பிரவுசரிலேயே கிடைக்கின்றன. நாம் முதல் வரிசையில் வைத்துப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் நான்கு பிரவுசர்களைக் காட்டிலும், இது கூடுதல் பாதுகாப்பு வசதிகளைக் கொண்டது என இதன் பயனாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த பிரவுசரைப் பொறுத்தவரை ஒரு சிறிய குறை ஒன்று உள்ளது. தங்கள் இணைய தளங்களை வடிவமைப்பவர்கள், இந்த பிரவுசரில் இயங்கும் வகையிலும், தங்கள் தளங்களை வடிவமைப்பதில்லை. எனவே, சில தளங்கள் இந்த பிரவுசரில் இயங்கா நிலை ஏற்படும்.


இதனைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி: http://www.opera.com/

 
4. கொமடோ ட்ரேகன் இன்டர்நெட் பிரவுசர் (Comodo Dragon Internet Browser): 


fZfJU1e.jpg?1


இணையத்திற்கான செக்யூரிட்டி சாப்ட்வேர் தொகுப்பினைத் தயாரிக்கும் கொமடோ நிறுவனம், இதனையும் வடிவமைத்து வெளியிட்டுள்ளது. குரோம் மற்றும் ஏவியேட்டர் பிரவுசர்கள் வடிவமைப்பின் கட்டமைப்பான குரோமியம் குறியீட்டு வரிகளைப் பயன்படுத்தியே, இந்த பிரவுசரும் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மட்டுமே காணப்படும் சில வசதிகள், இதற்கு ஒரு தனித்தன்மையினை அளிக்கின்றன. நம் இணையத் தேடல்களை வேறு புரோகிராம்கள் எதுவும் கண்டு கொள்ள முடியாதபடி தடுக்கிறது. நாம் செல்லும் ஒவ்வொரு இணைய தளத்தின் பாதுகாப்பு குறித்த சான்றிதழ்கள் (SSL certificates) அனைத்தையும் இது சோதனை செய்து பார்க்கிறது. இணைய தளம் பாதுகாப்பானது என்று உறுதி செய்த பின்னரே, நம்மை அனுமதிக்கிறது. நீங்கள் பயர்பாக்ஸ் பயன்படுத்துபவராக இருந்தால், கொமடோவின் ஐஸ் ட்ரேகன் (IceDragon) பதிப்பு பயர்பாக்ஸ் பிரவுசர் மாதிரியே இருப்பதனை உணர்வீர்கள். இந்த பிரவுசர் தற்போது விண்டோஸ் இயக்கத்தில் இயங்கும் வகையில் மட்டுமே கிடைக்கிறது.

இதனைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி: http://www.comodo.com/home/browsers-toolbars/browser.php

 


5. டார் பிரவுசர் (Tor browser): 
2vSwpLi.jpg



மேலே சொல்லப்பட்ட பிரவுசர்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட வகையில் செயல்படும் பிரவுசராக டார் பிரவுசர் உள்ளது. இந்த பிரவுசரின் தனிச் சிறப்பு என்னவென்றால், இது தரும் நம் தனிப்பட்ட தகவல்களுக்கான பாதுகாப்புதான். உலகெங்கும் இதன் நெட்வொர்க் கம்ப்யூட்டர்கள் இயங்கி இணைப்பு தருகின்றன. இதனால் இணையத்தில் உலாவும் ஹேக்கர்கள் நம் கம்ப்யூட்டரை இந்த பிரவுசர் வழி நெருங்க முடியாது. பல தன்னார்வலர்கள், இந்த தனி நெட்வொர்க் கம்ப்யூட்டர் சர்வர்களை இயக்கி வருகின்றனர். இணையத்தில் பாதுகாப்பாக இயங்க முடியும் என்பதனை நிரூபிக்கும் வகையில், இந்த நெட்வொர்க்கினைப் பராமரித்து வருகின்றனர். விண்டோஸ், மேக் மற்றும் லினக்ஸ் இயக்க முறைமைகளில் இயங்கும் வகையில், இதன் பதிப்புகள் கிடைக்கின்றன. இந்த பிரவுசரை, ஒரு யு.எஸ்.பி. ட்ரைவில் கூட இன்ஸ்டால் செய்து இயக்கலாம். எனவே, நம் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுகிறது. பாதுகாப்பினைக் காட்டிலும், தனிப்பட்ட முறையில் இயங்க நினைப்பவர்களுக்கு இந்த பிரவுசர் உகந்ததாகும். இருப்பினும், இதனை வடிவமைத்தவர்கள், இணைய தள முகவரியில் “https” என்ற முன்னொட்டு கொண்ட தளங்களுக்கு மட்டுமே செல்லுமாறு, இதன் பயனாளர்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.


இதனைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி:  https://www.torproject.org/projects/torbrowser.html.en

How To Identify The Counterfeit Certificate Websites..?


How To Identify The Counterfeit Certificate Websites..?


0vjz6ZV.jpg


இணைய தளங்களுக்கு, அவை சரியான மற்றும் முறையாக இயங்கும் தளங்கள் என ஒவ்வொரு நாட்டிலும் அதற்கென அமைக்கப்பட்ட அமைப்பு சான்றளிக்கிறது. இந்த சான்றிதழ்களை முதலில் சோதித்த பின்னரே, அவற்றின் உண்மை தன்மையை உறுதி செய்த பின்னரே, பிரவுசர்கள், அவற்றுடன் தொடர்பு கொள்ள நமக்கு வழி தரும். இந்த சான்றிதழ்கள் Secure Sockets Layer (SSL) என அழைக்கப்படுகின்றன. இந்தியாவில் இந்த சான்றிதழை, மத்திய அரசின் அமைப்பான, ”நேஷனல் இன்பர்மேடிக் சென்டர்” என்னும் அமைப்பின் அதிகாரம் பெற்ற ஒரு பிரிவு வழங்குகிறது. 


இந்தியாவில், இணையத்தில் வலம் வரும் ஹேக்கர்கள் மற்றும் வைரஸ்கள் குறித்து அறிந்து எச்சரிக்கை தரும் அமைப்பாக Computer Emergency Response Team-India (CERT-In) என்னும் அமைப்பு செயல்படுகிறது. அண்மையில் இந்த அமைப்பு, மேலே சொல்லப்பட்ட சான்றிதழ்களைப் போலவே, போலியான சான்றிதழ்களைத் தயார் செய்து, சில இணைய தளங்கள் இயங்குவதாகவும், அவற்றிடம் பயனாளர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் எனவும் அறிவித்துள்ளது. 



PfaAkST.jpg




 இது போல போலியான சான்றிதழ்களைக் கொண்டு இயங்கும் தளங்கள் செயல்படுவது, நம் இணைய பாதுகாப்பு தன்மைக்கு பிரச்னையாக உருவெடுக்கும் என சி.இ.ஆர்.டி. அமைப்பு கருதுகிறது. 


தொலைவிலிருந்து கம்ப்யூட்டர்களை கைப்பற்றி கெடுதல் விளைவிக்க இந்த சான்றிதழ்களைப் பலர் பயன்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, பயனாளர்கள் வழக்கமான முறைக்கு மாறாக செயல்படும் தளங்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என எச்சரித்துள்ளது.


இந்த வகை பிஷ்ஷிங் மற்றும் ஹேக்கிங் செயல்பாடு பெரும்பாலும் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்தும் கம்ப்யூட்டர்கள் வழியாகவே மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மைக்ரோசாப்ட் நம்பிக்கை அற்ற சான்றிதழ் கொண்டுள்ள தளங்களை பயனாளர்களுக்கு அடையாளம் காட்டும் பணியில் இறங்கியுள்ளது. 

மேலும், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்கள், இந்தியாவின் என்.ஐ.சி. நிறுவனம் போலியான சான்றிதழ்களைச் சில இணைய தளங்களுக்கு வழங்கியுள்ளது என்ற குற்றச் சாட்டினையும் தெரிவித்துள்ளது.


இந்தக் குற்றச் சாட்டிற்கான பதிலை தன் இணைய தளத்தில் என்.ஐ.சி. அமைப்பு வழங்கியுள்ளது. இது குறித்து மேலும் தகவல்களை அறிய இந்த தளத்தை வாசகர்கள் அணுகலாம்.


jeltDXq.jpg



பயனாளர்களைப் பொறுத்தவரை, இந்தக் குழப்பத்திலிருந்தும் பாதிக்கப்படுவதிலிருந்தும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள, மைக்ரோசாப்ட் வழங்கும் பாதுகாப்பு குறித்த புரோகிராம்களை அப்டேட் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். 


இணைய தளங்களுக்கு வழங்கப்படும் டிஜிட்டல் சான்றிதழில், சான்றிதழ் பெற்றவரின் பெயர், ஒரு வரிசை எண், சான்றிதழ் காலாவதியாகும் நாள், இந்த சான்றிதழைக் கொண்டிருப்பவர் பெற்றுள்ள பப்ளிக் கீ மற்றும் சி.ஏ. அமைப்பின் கையெழுத்துடன் கூடிய சான்றிதழ் ஆகியவை இருக்கும்.