Wednesday, 20 August 2014

How To Identify The Counterfeit Certificate Websites..?


How To Identify The Counterfeit Certificate Websites..?


0vjz6ZV.jpg


இணைய தளங்களுக்கு, அவை சரியான மற்றும் முறையாக இயங்கும் தளங்கள் என ஒவ்வொரு நாட்டிலும் அதற்கென அமைக்கப்பட்ட அமைப்பு சான்றளிக்கிறது. இந்த சான்றிதழ்களை முதலில் சோதித்த பின்னரே, அவற்றின் உண்மை தன்மையை உறுதி செய்த பின்னரே, பிரவுசர்கள், அவற்றுடன் தொடர்பு கொள்ள நமக்கு வழி தரும். இந்த சான்றிதழ்கள் Secure Sockets Layer (SSL) என அழைக்கப்படுகின்றன. இந்தியாவில் இந்த சான்றிதழை, மத்திய அரசின் அமைப்பான, ”நேஷனல் இன்பர்மேடிக் சென்டர்” என்னும் அமைப்பின் அதிகாரம் பெற்ற ஒரு பிரிவு வழங்குகிறது. 


இந்தியாவில், இணையத்தில் வலம் வரும் ஹேக்கர்கள் மற்றும் வைரஸ்கள் குறித்து அறிந்து எச்சரிக்கை தரும் அமைப்பாக Computer Emergency Response Team-India (CERT-In) என்னும் அமைப்பு செயல்படுகிறது. அண்மையில் இந்த அமைப்பு, மேலே சொல்லப்பட்ட சான்றிதழ்களைப் போலவே, போலியான சான்றிதழ்களைத் தயார் செய்து, சில இணைய தளங்கள் இயங்குவதாகவும், அவற்றிடம் பயனாளர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் எனவும் அறிவித்துள்ளது. 



PfaAkST.jpg




 இது போல போலியான சான்றிதழ்களைக் கொண்டு இயங்கும் தளங்கள் செயல்படுவது, நம் இணைய பாதுகாப்பு தன்மைக்கு பிரச்னையாக உருவெடுக்கும் என சி.இ.ஆர்.டி. அமைப்பு கருதுகிறது. 


தொலைவிலிருந்து கம்ப்யூட்டர்களை கைப்பற்றி கெடுதல் விளைவிக்க இந்த சான்றிதழ்களைப் பலர் பயன்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, பயனாளர்கள் வழக்கமான முறைக்கு மாறாக செயல்படும் தளங்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என எச்சரித்துள்ளது.


இந்த வகை பிஷ்ஷிங் மற்றும் ஹேக்கிங் செயல்பாடு பெரும்பாலும் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்தும் கம்ப்யூட்டர்கள் வழியாகவே மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மைக்ரோசாப்ட் நம்பிக்கை அற்ற சான்றிதழ் கொண்டுள்ள தளங்களை பயனாளர்களுக்கு அடையாளம் காட்டும் பணியில் இறங்கியுள்ளது. 

மேலும், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்கள், இந்தியாவின் என்.ஐ.சி. நிறுவனம் போலியான சான்றிதழ்களைச் சில இணைய தளங்களுக்கு வழங்கியுள்ளது என்ற குற்றச் சாட்டினையும் தெரிவித்துள்ளது.


இந்தக் குற்றச் சாட்டிற்கான பதிலை தன் இணைய தளத்தில் என்.ஐ.சி. அமைப்பு வழங்கியுள்ளது. இது குறித்து மேலும் தகவல்களை அறிய இந்த தளத்தை வாசகர்கள் அணுகலாம்.


jeltDXq.jpg



பயனாளர்களைப் பொறுத்தவரை, இந்தக் குழப்பத்திலிருந்தும் பாதிக்கப்படுவதிலிருந்தும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள, மைக்ரோசாப்ட் வழங்கும் பாதுகாப்பு குறித்த புரோகிராம்களை அப்டேட் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். 


இணைய தளங்களுக்கு வழங்கப்படும் டிஜிட்டல் சான்றிதழில், சான்றிதழ் பெற்றவரின் பெயர், ஒரு வரிசை எண், சான்றிதழ் காலாவதியாகும் நாள், இந்த சான்றிதழைக் கொண்டிருப்பவர் பெற்றுள்ள பப்ளிக் கீ மற்றும் சி.ஏ. அமைப்பின் கையெழுத்துடன் கூடிய சான்றிதழ் ஆகியவை இருக்கும்.

No comments:

Post a Comment