Wednesday, 10 December 2014

Do You Know What...!


Pinned: 

பின் செய்யப்பட்ட அல்லது குத்தி வைக்கப்பட்ட என்ற பொருளைக் கொண்ட இந்த சொல், விண்டோஸ் சிஸ்டத்தில், நாம் அடிக்கடி பயன்படுத்தும் அப்ளிகேஷன் புரோகிராம்களை, உடனடியாக எடுத்துப் பயன்படுத்தும் வகையில் அமைப்பதனைக் குறிக்கிறது. அப்ளிகேஷன்கள் மட்டுமின்றி, புரோகிராம்கள், இணைய தளங்களுக்கான லிங்க் என எதனையும் பின் செய்து வைக்கலாம். இவற்றை ஒரு மெனுவில் வைத்து, நாம் விரும்பும்போது இயக்கலாம். எடுத்துக் காட்டாக, விண்டோஸ் விஸ்டா ஸ்டார்ட் மெனு, இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மேலாக உள்ள பாதிப் பிரிவு, இது போன்ற பின் செய்யப்படும் புரோகிராம்களுக்கானது. எந்த புரோகிராம்களை எல்லாம் நாம் அடிக்கடி பயன்படுத்துகிறோமோ, அவற்றை இதில் பதிந்து வைக்கலாம்.



Carbon Copy:

 மின் அஞ்சல் அனுப்புகையில், முகவரிக்குக் கீழாக “CC:” என்ற பிரிவினைப் பார்த்திருப்பீர்கள். கார்பன் காப்பி என்பதன் சுருக்கம் இது. அனுப்பப்படும் மின் அஞ்சல் செய்தியினை, பல நபர்களுக்கு நகலாக அனுப்ப,இந்த முகவரிக் கட்டத்தினைப் பயன்படுத்தலாம். அதாவது, அனுப்பப்படும் அஞ்சல் தகவல்கள், இந்த கார்பன் காப்பி கட்டத்தில் உள்ள முகவரிக்குரியவர்களுக்கு அல்ல; ஆனாலும், அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி என்பதே இதைக் குறிக்கிறது. அஞ்சல் யாருக்கு எழுதப்படுகிறதோ, அவரின் முகவரி “To:” என்ற பிரிவில் அமைக்கப்படுகிறது. 



Blind Carbon Copy : 


மின் அஞ்சல் அனுப்புகையில், “BCC:” என்ற பிரிவினைப் பார்த்திருப்பீர்கள். இந்த பிரிவிலும், குறிப்பிட்ட அஞ்சலை நகலாக அனுப்பலாம். ஆனால், இந்தப் பிரிவில் உள்ள முகவரியில் உள்ளவர்கள் பெறுவதனை, அஞ்சலைப் பெறுபவர் மற்றும் கார்பன் காப்பி பிரிவில் உள்ளவர்கள் அறிய மாட்டார்கள். அவர்கள் அறியாமல், சிலருக்கு அனுப்ப இந்த ப்ளைண்ட் கார்பன் காப்பி உதவிடுகிறது. பொதுவாக, இது போன்ற பழக்கத்தை நாகரிகம் கருதி யாரும் பயன்படுத்துவதில்லை ஏனென்றால், இது நம்மிடமிருந்து அஞ்சலைப்  பெறுபவர்களின் நம்பிக்கைக்கு ஊறு விளைவிப்பதாகும். பெறுபவர்களின் பட்டியலை, மற்றவர்களிடமிருந்து மறைக்க வேண்டும் என எண்ணுபவர்கள், இதனைப்பயன்படுத்துவார்கள்.


Client: 


கம்ப்யூட்டர் நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டு சர்வராக இயங்காமல் பயன்படுத்தப்படும் எந்த கம்ப்யூட்டரும் கிளையண்ட் என அழைக்கப்படும். 



Doc: 


இது ஒரு பைலின் பெயரில் உள்ள துணைப் பெயர். இந்த பெயருடன் உள்ள பைல் மைக்ரோசாப்ட் வேர்ட் தொகுப்பில் உருவான பைல் என்பதனை இது குறிக்கிறது.



Domain Name:


இன்டர்நெட்டில் உள்ள தகவல் தளங்களை இச் சொல்லால் குறிப்பிடுகின்றனர். அந்த தளத்தின் பெயரை இது குறிக்கிறது. 



Download: 

கம்ப்யூட்டர் ஒன்றிலிருந்து நேரடியாக இன்னொரு கம்ப்யூட்டருக்குப் பைலை மாற்றுவதனை டவுண்லோட் எனக் குறிப்பிடுகிறோம். இருப்பினும் இன்டர்நெட் நெட்வொர்க்கில் இணைந்துள்ள கம்ப்யூட்டரிலிருந்து ஒரு பைல் இறக்கிப் பதியப்படுவதனையே இது பெரும்பாலும் குறிக்கிறது.



Hard Disk :

 (ஹார்ட் டிஸ்க்) பைல்களைப் பதிந்து வைத்து இயக்கப் பயன்படும் ஓர் அடிப்படை சாதனம். இதில் அனைத்து வகை பைல்களையும் பதியலாம். ஆப்பரேட்டிங் சிஸ்டம் (விண்டோஸ்), அப்ளிகேஷன் சாப்ட்வேர் (எம்.எஸ்.ஆபீஸ், பேஜ்மேக்கர் போன்றவை) மற்றும் இவற்றால் உருவாக்கப்படும் பைல்கள் அனைத்தையும் இதில் பதியலாம். இதனை முறையாகவும் கவனமாகவும் கையாள வேண்டும். இது கெட்டுப் போவதைத்தான் ஹார்ட் டிஸ்க் கரப்ட் ஆகிவிட்டதாகக் கூறுவார்கள். ஒரு முறை கெட்டுப் போனால் அதனை மீண்டும் சரி செய்வது சிரமமான காரியம். எனவே இதில் பதியப்படும் பைல்களுக்கு நகல் எடுத்து தனியே இதைப் போன்ற வேறு சாதனங்களில் பதிந்து வைப்பது நல்லது. 



Bandwidth:

 இணைக்கப்பட்ட இரு வேறு சாதனங்கள் இடையே நடைபெறும் டேட்டா பரிமாற்றத்தில் அதிக பட்ச டேட்டா பரிமாற்ற வேகத்தின் அளவை இது குறிக்கிறது. இது டேட்டா பயணிக்கும் வேகம் அல்ல.



Network: 


நெட்வொர்க் (இன்டர்நெட் உட்பட)கில் இணைக்கப்பட்டிருக்கும் ஒரு கம்ப்யூட்டரில் உள்ளே அனுமதியின்றி வரும் அடுத்தவரின் முயற்சியைத் தடுக்கும் ஒரு சாப்ட்வேர் அல்லது சிறிய ஹார்ட்வேர் சாதனம்.

To Avoiding Method Of Long Time Taken To File Transfer In Pendrive ..!

pSNYNA-USM16GQ~S_main_v500.png
பென்டிரைவ் என்பது கணினி பயன்படுத்துவோர் மட்டுமல்லாமல், கிட்டத்தட்ட அனைவருமே பயன்படுத்தும் ஒரு REMOVABLE DEVICE
ஆகும். இத்தகைய பென்டிரைவ்கள் (pendrives) நாம் கணினியில் பயன்படுத்தும்போது சில வேளைகளில் நம்முடைய பொறுமையைச் சோதிக்கும் அளவுக்கு மிகவும் மெதுவாக இயங்கும். அதிலுள்ள தரவுகளை பரிமாற்றம் செய்யும்போது நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும். இத்தகைய சூழ்நிலையைத் தவிர்ப்பது எப்படி? உங்களுடைய பென்டிரைவ் வேகமாகச் செயல்பட என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.


* உங்கள் கணினியில் பென்டிரைவை இணையுங்கள். (win+E) கொடுத்து MY COMPUTER செல்லவும்.

* அங்கு பென்டிரைவிற்கான டிரைவை வலது கிளிக் செய்துறி properties என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

* தொடர்ந்து திறக்கும் விண்டோவில் HARDWARE என்னும் டேபை கிளிக் செய்யவும். பிறகு Name என்னும் தலைப்பின் கீழுள்ள உங்கள் பென்டிரைவைத் தேர்ந்தெடுக்கவும்.

* பிறகு கீழிருக்கும் Properties என்பதை கிளிக் செய்து Ok கொடுக்கவும்.

* அடுத்து தோன்றும் விண்டோவில் change settings என்பதை கிளிக் செய்யவும்.

* அதற்கு அடுத்துத் தோன்றும் பெட்டியில் Policies எனும் டேபிள் கிளிக் செய்து அதன் கீழிருக்கும் Better Performance என்பதைத் தேர்ந்தெடுத்து OK கொடுக்கவும்.


இப்போது உங்கள் பென்டிரைவ் முன்பைக் காட்டிலும் வேகமாக இயங்கும். இதை நீங்கள் கண்கூடாக காண்பீர்கள். மறக்காமல் ஒவ்வொரு முறையும் பென்டிரைவை கணினியிலிருந்து நீக்கும்போது Safely remove hardware என்பதைக் கிளிக்செய்து பின்பு உங்கள் பென் டிரைவை கணினியிலிருந்து நீக்கவும். இதை ஒரு தொடர் பழக்கமாக மாற்றிக்கொள்ளுங்கள். இதனால் உங்கள் பென்டிரைவ் சேதமடையாமல் நீண்ட காலம் உழைக்கும்.

How To Delete Startup Program Files In Computer...?


gL0zmsM.gif



நம் கம்ப்யூட்டரை இயக்கத் தொடங்கியவுடன், பல ஸ்பேம் புரோகிராம்கள், நாம் அறியாமலேயே, நம் அனுமதியின்றியே இயங்கத் தொடங்கி, பின்னணியில் இயங்கியவாறே இருக்கின்றன. startup programs என இவை அழைக்கப்படுகின்றன. இவை நம் கம்ப்யூட்டர் இயக்கத்தின் செயல் வேகத்தினைக் குறைக்கின்றன. இவை இயங்குவது கூட நமக்குத் தெரியவில்லை. ஏனென்றால், நாம் புதிய சாப்ட்வேர் அப்ளிகேஷன் ஒன்றை இன்ஸ்டால் செய்கையில், அதனுடன் ஒட்டிக் கொண்டு இவை கம்ப்யூட்டரை அடைகின்றன. இவற்றை நீக்கினால், நம் கம்ப்யூட்டர் செயல்பாட்டில் பிரச்னை ஏற்படுமோ என்று சிலர் தேவையற்ற பயம் கொண்டு, இவற்றுடனேயே செயல்படுகின்றனர். சிலரோ, இவற்றை எப்படி நீக்குவது என்று அறியாமல் உள்ளனர். அதற்கான வழிகளை இங்கு பார்க்கலாம். விண்டோஸ் விஸ்டா, விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் இவற்றை எப்படி நீக்குவது எனக் காணலாம்.


1. சிஸ்டம் கான்பிகரேஷன் டூல் (System Configuration Tool):



 விண்டோஸ் கீ + R அழுத்தினால், ரன் விண்டோ கிடைக்கும். இதில் msconfig என டைப் செய்து எண்டர் அழுத்தினால், சிஸ்டம் கான்பிகரேஷன் என்னும் விண்டோ கிடைக்கும். இதன் மூலம் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குவதை வரையறை செய்து அமைக்கலாம். இதில் உள்ள Startup டேப் அழுத்தினால், விண்டோஸ் இயக்கம், இயங்கத் தொடங்குகையில், இயங்கத் தொடங்கும் அனைத்து அப்ளிகேஷன் புரோகிராம்களின் பட்டியல் கிடைக்கும். இதில் Start Menu's Startup போல்டரில் உள்ள அனைத்து அப்ளிகேஷன்களும் அடங்கும். இதனைத்தான் நாம் சற்று சீரமைக்க வேண்டியுள்ளது. ஆனால், அதற்கும் முன், இந்த பட்டியலில் இருக்கும் நம் கம்ப்யூட்டர் இயங்கத் தேவையான புரோகிராம்களை நாம் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். எடுத்துக் காட்டாக, நம் கம்ப்யூட்டரில் பதியப்பட்டுள்ள ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் கட்டாயம் எப்போதும் இயங்கிக் கொண்டிருக்க வேண்டும்.


2. தேவையற்ற அப்ளிகேஷன்களை முடக்குக: 


மேலே சொன்ன பட்டியலை முழுமையாக ஒன்றன் பின் ஒன்றாகப் பார்க்கவும். பின்னர், நமக்குத் தேவை இல்லாத புரோகிராம்கள் என உறுதி செய்யக் கூடியவற்றை நீக்கவும். இதற்கு, இந்த புரோகிராம் முன் உள்ள செக் பாக்ஸில் இருக்கும் டிக் அடையாளத்தின் மீது கிளிக் செய்தால், அந்த டிக் அடையாளம் நீக்கப்படும். இனி, அந்த புரோகிராம், ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் இயங்கத் தொடங்காது. இதனைச் செய்து முடித்தவுடன், ஓகே கிளிக் செய்திடவும். உடன், சிறிய விண்டோ ஒன்று காட்டப்பட்டு, கம்ப்யூட்டரை ரீ ஸ்டார்ட் செய்திடவா அல்லது பின்னர் செய்திடலாமா என்று கேள்வி கேட்டு ஒரு விண்டோ கிடைக்கும். உங்கள் வசதிப்படி, கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்திடலாம்; அல்லது, அந்த வேலையைப் பின் நாளில் வைத்துக் கொள்ளலாம். இதற்கு Restart மற்றும் 'Exit without restart' என்ற ஆப்ஷன்கள் தரப்பட்டிருக்கும். உங்கள் முடிவுக்கேற்ற ஒன்றைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடலாம்.


3. விண்டோஸ் 8/8.1ல் முடக்கும் செயல்பாடு:

EefqsHS.png



மேலே சொன்ன பணியை எப்படி விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் 8.1 சிஸ்டங்களில் எப்படி மேற்கொள்ளலாம் என்று பார்க்கலாம். டாஸ்க்பாரில் ரைட் கிளிக் செய்திடவும். பின்னர் டாஸ்க் மானேஜர் (Task Manager) விண்டோவினை இயக்கத்திற்குக் கொண்டு வரவும். இதற்குCTRL-+SHIFT+ -ESC கீகளை அழுத்தியும் செயல்படலாம். தொடர்ந்து Startup என்பதில் கிளிக் செய்திடவும். விண்டோஸ் 8 சிஸ்டம், இதில் காட்டப்பட்டுள்ள ஒவ்வொரு அப்ளிகேஷன் என்னவித செயல்பாட்டினை ஏற்படுத்தும் எனக் காட்டும். இந்தப் பட்டியலை அலசி ஆய்வு செய்து, அதிக பாதிப்பு தருகின்ற, தேவைப்படாத புரோகிராம்களைக் கண்டறியலாம். நீக்கப்பட வேண்டிய புரோகிராம் ஒன்றினைத் தேர்வு செய்து, Disableஎன்பதில் கிளிக் செய்திடவும். முன்பு சொல்லியபடி, தேவையற்றது என்று சரியாக முடிவு செய்திடும் புரோகிராம் மீது மட்டும் Disable அமைக்கவும்.



4. சில சேவைகளை முடக்கவும்: 



மேலே கூறியபடி செயல்பட்டு, பல புரோகிராம்களை நீக்கிய பின்னரும், உங்கள் கம்ப்யூட்டர் வேகம் முன்பு போலவே மிக மெதுவாக இருந்தால், கம்ப்யூட்டர் இயங்கத் தொடங்குகையில், தானாகவே தொடங்கும் சில சேவைகளையும் (services) நிறுத்தலாம். இதற்கு அனைத்து ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும் System Configuration விண்டோவினைத் திறக்க வேண்டும். (இதற்கு Windows+R அழுத்தி msconfig டைப் செய்து, பின்னர் Enterஅழுத்தவும். பின்னர், இம்முறை Services டேப்பினை அழுத்தவும். இங்கு ஒவ்வொரு சர்வீஸ் அடுத்து, அதனைத் தயாரித்து வழங்கும் நிறுவனத்தின் பெயர் காட்டப்படும். இதில் Microsoft Corporation என்று இருக்கும் இடத்தில் கை வைக்க வேண்டாம். அதே போல, நீங்கள் இன்ஸ்டால் செய்து இயக்கும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்பினை தயாரித்து வழங்கும் நிறுவனத்தின் பெயர் கொண்ட சேவை பக்கமும் செல்ல வேண்டாம். 


5. தேவை எனில் மீண்டும்: 



மேலே சொன்ன வழிகளில் நீக்கிய எதனையாவது மீண்டும் தேவை என நீங்கள் எண்ணினால், அதனை மீண்டும் எளிதாக இயங்கும் சாப்ட்வேர் அப்ளிகேஷன் அல்லது சேவை பட்டியலில் இணைக்கலாம். குறிப்பிட்ட டேப் அழுத்தி, பின், இவற்றின் பட்டியலை வரிசையாகப் பார்த்து, நீங்கள் மீட்டு இயக்க விரும்பும் புரோகிராமினை டிக் அடித்து சேர்க்கவும்.  ஆனால், ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். நீக்குவதாயினும், நீக்கியதைச் சேர்ப்பதாயினும், மேலே கூறப்பட்ட வழிமுறைகளை மேற்கொண்ட பின்னர், கம்ப்யூட்டரை மீண்டும் ரீஸ்டார்ட் செய்தால் தான், நாம் விரும்பிய செயல்பாடு மேற்கொள்ளப்படும்.

How To Improve Windows Activity In Computer..!


கம்ப்யூட்டரில் நாம் பயன்படுத்தும் அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகளைப் போல, விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அவ்வளவாக ஆர்வமூட்டும் வகையில் இருப்பதில்லை. இருப்பினும் இதனை எளிதாகவும், விரைவாகவும் இயக்கி நமக்குத் தேவயானதைப் பெற, இங்கு சில உதவிக் குறிப்புகள் தரப்படுகின்றன. இவை டெஸ்க்டாப் கம்ப்யூட்டர், லேப் டாப் கம்ப்யூட்டர் மற்றும் அனைத்து விண்டோஸ் சிஸ்டங்களிலும் பயன்படுத்தக் கூடியவையே. சில குறிப்புகள் பெர்சனல் கம்ப்யூட்டருக்கானவையாக இருக்கலாம். சில விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8க்கானவையாக தரப்படுகின்றன.



போல்டர்கள் & பைல்களை அமைத்தல்

நீங்கள் உருவாக்கும் பைல்கள் அனைத்தையும் My Documents போல்டரிலேயே சேமித்து வைத்தால், நிச்சயம் பைல் ஒன்றைத் தேடிப் பெறுவது சிரமமாக இருக்கும். எனவே, அலுவலக பைல்கள், சொந்த தனிவாழ்க்கைக்கான பைல்கள், குடும்ப உறுப்பினர்களுக்கான பைல்கள் என பல போல்டர்களை அமைத்து, சேமித்து வைப்பது நல்லது. இவற்றில் துணை போல்டர்களையும் அமைத்து, பைல்களைப் பிரித்து அடுக்க வேண்டும். 



டெஸ்க்டாப் சுத்தம்

டெஸ்க்டாப்பில் ஐகான்களைப் பதிந்து வைப்பது, நமக்குத் தேவையான அப்ளிகேஷன் புரோகிராம்களை, விரைவாக இயக்கிப் பயன்படுத்த முடியும் என்பதனால்தான். ஆனால், இதற்காக, அனைத்து அப்ளிகேஷன்களுக்கும் அவற்றிற்கான ஐகான்களை டெஸ்க்டாப்பில் வைத்தால், அந்த நோக்கமே கெட்டுவிடும். எனவே, அடிக்கடி தேவைப்படாதவற்றிற்கான ஐகான்களை நீக்கிவிடுவதே நல்லது. மேலும், தொடர்புள்ள ஐகான்களை ஒரு குழுவாகவும் அமைக்கலாம். எடுத்துக் காட்டாக, Word, Excel and PowerPoint ஆகியவற்றிற்கான ஐகான்களை, டெஸ்க்டாப்பில் அருகருகே அமைத்தால், நாம் தேடி அலைய வேண்டியதில்லை.



போல்டர்களைப் பின் செய்திடுக

போல்டர்களை எளிதாக அடைவதற்கு அவற்றை டாஸ்க்பாரில் பின் செய்து வைக்கலாம். இதற்கு விண்டோஸ் எக்ஸ்புளோரரைத் திறந்து, போல்டர்களை அப்படியே இழுத்து வந்து, டாஸ்க்பாரில் பின் செய்திடலாம். டாஸ்க் பாரில் உள்ள விண்டோஸ் எக்ஸ்புளோரர் ஐகானை ரைட் கிளிக் செய்தால், பின் செய்யப்பட்ட போல்டர் முதலில் காட்டப்படும். அடிக்கடி நீங்கள் பயன்படுத்தும் போல்டர்களை மட்டும் இது போல பின் செய்திடவும். இல்லை எனில், இங்கும் கூட்டம் அதிகமாகி, நீங்கள் தேடிப் பெற வேண்டிய சூழ்நிலை உருவாகிவிடும்.



ஒன்றுக்கு மேற்பட்ட டெஸ்க்டாப்

மேலே, டெஸ்க்டாப்பில் அதிகமாகும் ஐகான்களை நீக்குவது குறித்து டிப்ஸ் தரப்பட்டுள்ளது. ஒன்றுக்கு மேற்பட்ட டெஸ்க்டாப்பினையும் நீங்கள் உருவாக்கிப் பயன்படுத்தலாம். ஒரு டெஸ்க்டாப் விளையாட்டுகள், இன்னொன்று அப்ளிகேஷன்களில் உருவாக்கும் பைல்களுக்கு, இன்னொன்று பாடல், விடியோ காட்சிகளுக்கான அப்ளிகேஷன்கள் எனப் பிரித்து அமைக்கலாம். ஒன்றுக்கு மேற்பட்ட டெக்ஸ்டாப் அமைக்க விண்டோஸ் 10 வரும்வரை காத்திருக்க வேண்டியதில்லை. தற்போதைக்கு Dexpot என்ற அப்ளிகேஷன் மூலம், விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8லும் இதனை அமைக்கலாம். இந்த அப்ளிகேஷனை http://download.cnet...4-10580780.html என்ற முகவரியில் உள்ள இணைய தளத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம். 



முக்கிய போல்டர் ஹைலைட்

நமக்குத் தேவையான போல்டர்களை ஹைலைட் செய்து வைத்துக் கொள்வது நல்லது. விண்டோஸ் எக்ஸ்புளோரரில் உள்ள போல்டர்களில், நாம் அடிக்கடி பயன்படுத்துபவற்றை, ஹைலைட் செய்து வைத்துக் கொள்ளலாம். இதனை எப்படி மேற்கொள்ளலாம்? அவற்றிற்கு வேறு சில ஐகான்களை, வழக்கமான ஐகான்களுக்குப் பதிலாக அமைக்கலாம். இதற்கு குறிப்பிட்ட போல்டரில், ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Properties கிளிக் செய்திடுக. இதில் Customize என்னும் டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு 'Change Icon' என்பதனைத் தேர்ந்தெடுத்து, நீங்கள் விரும்பும் படத்தினை ஐகானாக அமைத்திடவும். உங்களுடைய படம் உள்ள ஐகான் தயார் செய்தும் அமைக்கலாம்.
 



விண்டோஸ் எக்ஸ்புளோரர் செட் அப்


போல்டர் ஒன்றில் உள்ள கோப்புகளை, பல்வேறு கோணங்களில், வகைகளில், காட்டும்படி அமைக்கும் வசதி, விண்டோஸ் எக்ஸ்புளோரரில் உள்ளது. போட்டோ அல்லது விடியோ பைல் இருந்தால், சிறிய அல்லது பெரிய ஐகான்களுடன் காட்டும் வகையில் அமைத்துவிட்டால், கோப்புகளைத் தேடுகையில், இந்த படங்களைப் பார்த்து, எளிதில் விரைவாகத் தேர்ந்தெடுக்கலாம். வேர்ட் டாகுமெண்ட் பைல்கள் என்றால், List/ Details தேர்ந்தெடுத்தால், கூடுதல் வசதிகளைப் பெறலாம்.



டெக்ஸ்ட் மற்றும் ஐகான் அளவை மாற்றுக

பல அப்ளிகேஷன்கள், அவற்றில் உள்ள டெக்ஸ்ட் மற்றும் ஐகான்கள், படங்கள் ஆகியவற்றின் அளவைப் பெரிதாக்கிப் பார்க்க, பின்னர் சிறியதாக மாற்ற வசதிகள் கொண்டுள்ளன. விண்டோஸ் சிஸ்டத்திலும் இதே போல் அமைக்கலாம். டெக்ஸ்ட் மற்றும் ஐகான் அளவினை 125% அல்லது 150% அதிகப்படுத்தினால், பார்ப்பதற்கும் படிப்பதற்கும் எளிதாக இருக்கும். இதற்கு Control Panel > Appearance and Personalization > Display > Make text and other items larger or smaller என்று சென்று அமைக்கவும்.



வால்பேப்பர் மாற்றுக



திரையின் மேலாக, உங்களுக்குப் பிடித்த அல்லது உங்கள் படத்தினை வால் பேப்பராக அமைத்திருப்பீர்கள். இந்தப் படங்களினால், டெஸ்க்டாப்பின் மீது உள்ள ஐகான்களைச் சட்டென்று அடையாளம் கண்டு தேர்ந்தெடுக்க முடியாது. இந்த சிக்கலைத் தீர்க்க, படங்களின் ரெசல்யூசன் அல்லது வண்ணத்தை மாற்ற வேண்டும். அல்லது போட்டோவினை எடுத்துவிட்டு, எதுவும் இல்லாத, விண்டோஸ் பின்னணியில் வால் பேப்பர் அமைக்கப்பட வேண்டும்.



டெஸ்க்டாப்பில் இயக்க சாதனங்கள்

டெஸ்க்டாப்பில் சில இயங்கும் சாதனங்களுக்கான அடையாளங்களை அமைக்கலாம். இவற்றை gadget என அழைக்கிறோம். இவை எப்போதும் இயங்கிக் கொண்டிருப்பவை. இவை நமக்குப் பயன் தருபவை. எடுத்துக் காட்டாக காலண்டர், கடிகாரம் போன்றவற்றைக் கூறலாம். விண்டோஸ் 8 சிஸ்டத்தில் இவை தரப்படாவிட்டாலும், விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இவை கிடைக்கின்றன. விண்டோஸ் 8 சிஸ்டத்தில் இவை எளிதாகக் கிடைக்கும் டூலாக இல்லை. இவற்றை அமைக்க, டெஸ்க்டாப்பில் காலியாக உள்ள இடத்தில், ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில் gadgetsஎன்பதில் கிளிக் செய்திடவும். உடன் பல கேட்ஜட்டுகள் கிடைக்கும். இதில் தேவையானவற்றை தேர்ந்தெடுத்து அமைக்கலாம். இணையத்தில் தேடினால் சில கிடைக்கலாம். அவற்றையும் தேர்ந்தெடுத்து அமைக்கலாம்.



யூசர் அக்கவுண்ட்ஸ்

உங்களுடைய பெர்சனல் கம்ப்யூட்டரை ஒன்றுக்கு மேற்பட்டவர் பயன்படுத்தினால், ஒவ்வொருவருக்கும் தனித்தனியே யூசர் அக்கவுண்ட் அமைத்து வழங்கலாம். இதனால், ஒருவரின் பணியில் மற்றொருவர் குறுக்கீடு இல்லாமல் அமைக்கப்படும். இதற்கு Control Panel > User Accounts and Family Safety > Add or remove user accounts என்று சென்று அமைக்கவும்.
 


லைப்ரரீஸ் (Libraries) பயன்படுத்துக

டாகுமெண்ட்ஸ், மியூசிக், போட்டோ மற்றும் வீடியோ போன்ற பைல்களை, விரைவாக வேறுபடுத்திப் பார்த்து பயன்படுத்த லைப்ரரீஸ் நமக்கு உதவும். லைப்ரரீஸ் பிரிவில் போல்டர்களை வெறுமனே போட்டு வைப்பதனைக் காட்டிலும், விண்டோஸ் சிஸ்டத்திடம், ஒவ்வொரு லைப்ரரியிலும், எந்த பைல்களைப் போட்டு வைக்க வேண்டும் என்பதனை வரையறை செய்து அமைத்திடலாம். இந்த பைல்கள் லைப்ரரியில் காப்பி செய்து வைக்கப்படும். இந்த டூலை சிறப்பாகப் பயன்படுத்திட http://www.pcadvisor...dows-libraries/என்ற முகவரியில் உள்ள கட்டுரையைப் பார்க்கவும்.



பெரிய பைல்களைக் காண்க


பெரிய அளவிலான சில பைல்கள், உங்கள் ஹார்ட் ட்ரைவில் அதிக இடம் பிடிக்கும். பெரும்பாலான பெரிய பைல்கள் நமக்குத் தொடர்ந்து தேவைப்படாததாகவே இருக்கும். நீக்கப்பட வேண்டிய நிலையிலேயே அமைந்திருக்கும். இந்த பெரிய பைல்களைக் கண்டறிய, தனியே எந்த அப்ளிகேஷனையும் நாம் பயன்படுத்த வேண்டாம். விண்டோஸ் எக்ஸ்புளோரரில் இதற்கான வசதி உள்ளது. சர்ச் பாக்ஸில் 'size:gigantic' என்று டைப் செய்து எண்டர் தட்டவும். விண்டோஸ் 128 எம்.பி. அளவிற்கு மேல் உள்ள பைல்களை அடையாளம் காட்டும். இவற்றில் உங்களுக்கு தேவைப்படாத பைலை நீங்கள் அழித்துவிடலாம்.



ஷார்ட் கட் தெரிந்து கொள்ளுங்கள்

நாம் நம் கீ போர்ட் மற்றும் மவுஸ் மூலம் மெனுக்களைப் பயன்படுத்தி, நம் பணிகளை முடித்துக் கொண்டாலும், விண்டோஸ் சிஸ்டத்தில், அதிக எண்ணிக்கையில், இந்த வேலைகளுக்கு ஷார்ட் கட் கீகள் உள்ளன. இவை அனைத்தையும் நாம் கற்றுக் கொண்டு செயல்படுத்த முடியாது என்றாலும், சில அடிப்படை ஷார்ட்கட் கீகளை (எ.கா. Ctrl-X for Cut, Ctrl-C for Copy, and Ctrl-V for Paste) தெரிந்து வைத்துப் பயன்படுத்தலாம்.



விண்டோஸ் 8 குரூப் டைல்ஸ்

விண்டோஸ் 8 பயன்படுத்துபவர்கள், திரையில் நிறைய டைல்ஸ்களைக் காண்பார்கள். இவை பல திரைகளில் காணப்படும். விரலால் தொட்டு அல்லது மவுஸால் இழுத்து இவற்றைக் காண வேண்டும். இதற்குப் பதிலாக, அப்ளிகேஷன்களை, குழுவாக ஒரு டைலில் அமைக்கலாம். இதற்கு குழுவாக அமைக்க வேண்டியவற்றுள் முதல் கட்டத்தினை ஸ்டார்ட் ஸ்கிரீனில் காலியாக உள்ள இடத்திற்கு இழுக்கவும். இந்தக் கட்டத்தின் பின்னால், grey bar ஒன்று காட்டப்படும் வேளையில், அந்த டைலை விட்டுவிடவும். இந்த கிரே பார், இது ஒரு புது டைல் என்று காட்டுகிறது. இப்போது, எந்த அப்ளிகேஷன் டைல்களை இதில் குழுவாக அமைக்க வேண்டுமோ, அதில் இழுத்துவிடவும். இதனால், நமக்கு குறிப்பிட்ட அப்ளிகேஷனைத் தேடிப் பெறுவது எளிதாகிறது. பல திரைகளுக்குச் செல்ல வேண்டியதில்லை.




ஸ்டிக்கி நோட்ஸ் பயன்படுத்துக

நீங்கள் மேற்கொள்ள வேண்டிய வேலைகளுக்கான நினைவூட்டல் உங்களுக்குத் திரையில் தேவை என்றால், இப்படிப்பட்ட தேவைகளுக்காகவே உருவாக்கப்பட்டு விண்டோஸ் இயக்கத்தில் தரும் ஸ்டிக்கி நோட்ஸ் (Sticky Notes) என்ற டூலைப் பயன்படுத்தவும். ஸ்டார்ட் மெனு திரைத் தேடல் கட்டத்தில் தேடி இதனை எளிதாகப் பெறலாம். இதனை இயக்கினால், திரையில் காலியாக உள்ள சிறிய கட்டம் அளவில் ”தாள்” ஒன்று கிடைக்கும். இதில் நாம் விரும்பும் நினைவூட்டல் தகவலைப் பதிந்து வைக்கலாம். இதன் வண்ணத்தை நமக்குப் பிடித்தபடி, திட்டமிடும் வகையில் மாற்றலாம். இதில் ரைட் கிளிக் செய்தால், இது போன்ற பல வேலைகளுக்கான ஆப்ஷன்கள் அடங்கிய மெனு கிடைக்கும். உங்களுக்கு மேலும் பல ஸ்டிக்கி நோட்ஸ் தாள் வேண்டும் என்றால், இதன் மேலாக இருக்கும் + அடையாளத்தில் கிளிக் செய்து பெறவும்.
 


விண்டோஸ் 8 திரையில் தேடல்:

விண்டோஸ் 7 சிஸ்டத்தில், ஸ்டார்ட் மெனு மேலாகக் கிடைக்கும் சர்ச் பாக்ஸில், நமக்குத் தேவையான அப்ளிகேஷன்கள், போல்டர்களைத் தேடிப் பெறுகிறோம். ஆனால், இது விண்டோஸ் 8ல் இது சாத்தியமில்லை. ஏனென்றால், அதில் ஸ்டார்ட் பட்டன் இல்லை. ஸ்டார்ட் மெனு கிடைப்பதில்லை. இருப்பினும் ஸ்டார்ட் ஸ்கிரீனில் நீங்கள் இருந்தால், விண்டோஸ் கீயை அழுத்திவிட்டு, டைப் செய்திட முயன்றால், உடன் தேடல் கட்டம் கிடைக்கும். பாதி டைப் செய்திடுகையிலேயே நீங்கள் தேடும் அப்ளிகேஷன் கிடைக்கலாம். மேலும், அப்ளிகேஷனுக்கென தனி கட்டமும் காட்டப்படும். 
 


துல்லியமாக டெக்ஸ்ட் அமைக்க


விண்டோஸ் உங்கள் டெக்ஸ்ட்டின் தோற்றத்தை சரி செய்திடும் டூல் கொடுக்கிறது. இதன் மூலம் டெக்ஸ்ட் காட்டப்படும் தன்மையை துல்லியமாக மாற்றலாம். இந்த டூலின் பெயர் ClearType Text Tuner. இதனைப் பயன்படுத்தி டெக்ஸ்ட்டை மிகத் தெளிவாக அமைக்கலாம். இதனைப் பயன்படுத்திப் பார்த்த பின்னரே, இங்கு சொல்லப்படும் துல்லியம் என்பதனை நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ள முடியும். இந்த டூலைப் பெறControl Panel > Appearance and Personalization > Fonts > Adjust ClearType text எனச் செல்லவும்.
 



டிஸ்க் டிபிராக் செய்திடுக


உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரின் செயல் வேகத்தினை மந்தப்படுத்தும் காரணங்கள் பல இருந்தாலும், அதிலிருந்து ஓரளவிற்காவது விடுபட, ஹார்ட் டிஸ்க்கினை டிபிராக் செய்வது நல்லது. இதனை மேற்கொள்ள, நமக்கு எந்த வேறு நிறுவனங்களின் அப்ளிகேஷன் சாப்ட்வேர் எதுவும் தேவையில்லை. விண்டோஸ் சிஸ்டமே நமக்குத் தேவையானதை வழங்குகிறது. இதனை இயக்குகையில் நாம் வேறு எந்த பணியையும் மேற்கொள்ளாமல் இருப்பது நல்லது. எனவே, கம்ப்யூட்டரில் பணி இல்லாதபோது, இதனை இயக்கி, ஹார்ட் டிஸ்க்கினை நேர் செய்திடலாம். இது பைல்களைச் சீராக அடுக்கி வைக்கும். துண்டு துண்டாகப் பல இடங்களில் பதிவு செய்யப்பட்ட பைலை ஒரே இடத்தில் வைக்கும். எனவே, கம்ப்யூட்டரின் செயல்வேகம் அதிகமாகும். Disk Defragmenter என ஸ்டார்ட் மெனுவில் டைப் செய்து இதனைப் பெற்றுக் கொள்ளலாம்.



பயர்வால் பயன்படுத்துக

பெர்சனல் கம்ப்யூட்டரில் பயர்வால் செயல்பட்டுக் கொண்டிருந்தால், இணைய இணைப்பில் இருக்கையில், கெடுதல் விளைவிக்கும் மால்வேர் புரோகிராம்கள், நம் கம்ப்யூட்டருக்குள் நுழையாமல் பாதுகாப்பு கிடைக்கும். எனவே, இதனை இயக்காமல் இருந்தால், உடனே இயக்கி, கம்ப்யூட்டருக்குக் கூடுதல் பாதுகாப்பினைத் தரவும். இதனைப் பெற்று இயக்க Control Panel > System and Security > Windows Firewall என்று செல்லவும்.



டாஸ்க்பார் மறைத்தல்

சில நேரங்களில், உங்கள் மானிட்டர் திரையின் முழு இடமும் உங்களுக்குத் தேவைப்படலாம். ஆனால், கீழாக இருக்கின்ற டாஸ்க் பார் சிறிது இடத்தைப் பிடித்துக் கொண்டு முழு இடமும் தரவிடாமல் செய்திடலாம். இதற்கு டாஸ்க் பாரினை மறைத்துவைத்து, நாம் கம்ப்யூட்டரின் இயக்குவதனை அமைத்திடலாம். டாஸ்க் பாரில் ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில் Properties தேர்ந்தெடுக்கவும். 

இப்போது டாஸ்க் பார் அண்ட் ஸ்டார்ட் மெனு டயலாக் பாக்ஸ் காட்டப்படும். டாஸ்க் பார் டேப்பில் Auto-hide the taskbar என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர், அந்த டயலாக் பாக்ஸிலிருந்து வெளியேறவும். இப்போது டாஸ்க் பார் மறைக்கப்பட்டிருக்கும். உங்கள் கர்சரை டாஸ்க் பார் காட்டப்பட்ட இடத்தின் அருகே கொண்டு சென்றால், டாஸ்க் பார் மீண்டும் எழுந்து வரும். 



பெயிண்ட் பயன்படுத்துக


விண்டோஸ் சிஸ்டம் தன்னிடத்தே கொண்டுள்ள பெயிண்ட் புரோகிராம், மற்ற இது போன்ற தர்ட் பார்ட்டி புரோகிராம்களைப் போல அதிக வசதிகளைக் கொண்டதாக இல்லாவிட்டாலும், முன்பு தரப்பட்டதைப் போல இல்லாமல், சற்று கூடுதல் வசதிகளுடன் தரப்பட்டுள்ளது. போட்டோக்களை இதில் நன்றாக எடிட் செய்திடலாம். படங்களை எடிட் செய்து, இணைத்து, புதிய விளைவுகளைச் சேர்த்து, படங்களை முற்றிலுமாக மாற்றி அமைக்கலாம். உங்கள் விண்டோஸ் சிஸ்டத்திற்கான வால் பேப்பரைக் கூட இதில் தயாரிக்கலாம்.

Is Your Computer Hardware Sleeped...!

27a9g8r.jpg


பல நேரங்களில், நாம் கம்ப்யூட்டரில் எந்தப் பணியையும் மேற்கொள்ளாமல், வேறு வேலைகளைப் பார்த்துக் கொண்டிருப்போம். அப்போது ஹார்ட் ட்ரைவ் என்ன செய்திடும்? அதுவும் எந்த வேலையும் மேற்கொள்ளாமல், செயல்படாமல் இருக்குமா? அப்படி என்றால், அதன் செயலாக்கத்தினைக் காட்டும் சிறிய எல்.இ.டி. விளக்கு ஏன் தொடர்ந்து அணைந்து எரிகிறது? இந்த கேள்விகள் மனத்தில் எழுந்தாலும், நாம் பதில் காண முற்படுவதில்லை. இந்த சூழ்நிலைகளை இங்கு சற்று விளக்கமாகப் பார்க்கலாம்.

நாம் கம்ப்யூட்டரை விட்டு சற்று விலகிச் செல்கையில், கம்ப்யூட்டர் நாம் மீண்டும் வந்து பணியினைத் தொடங்க காத்திருக்கிறது. ஆனால், காத்திருக்கும் அந்த நேரத்திலும் அது வழக்கமான தன் வேலையினை மேற்கொண்டு தான் உள்ளது. இந்த வேலைகளை மேற்கொள்ள அதனை இயக்கும் வகையில் யாரும் தேவை இல்லை. எனவே, கம்ப்யூட்டரின் திறன், நீங்களாக அதனை இயக்கும் வகையில், பயன்படுத்தப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. அப்படியானால், நாம் மறுபடியும் வந்து, மீண்டும் நம் பணியைத் தொடரும்போது, ஹார்ட் ட்ரைவில் மேற்கொள்ளப்படும் வேலை அப்படியே நின்றுவிடுமா? ஆம், அப்போதைக்கு அது ஒத்தி வைக்கப்படும். ஏனென்றால், நாம் தொடரும் வேலையினை மேற்கொள்ள. அப்படி என்ன வேலையை அது பார்த்துக் கொண்டிருந்தது. அதனை நாம் கண்காணித்து அல்லது தேடிப் பார்க்க இயலுமா? முடியாது. ஹார்ட் ட்ரைவில் நாம் இல்லாத போது, மேற்கொள்ளப்பட்ட பணியினை நாம் கண்டறிய முடியாது. அப்படியானால், அந்தப் பணிகள் தான் என்ன? இங்கு பார்க்கலாம்.


பின்னணியில் அப்படி என்னதான் நடக்கிறது?கம்ப்யூட்டரை நாம் இயக்காத போது, சில பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது நாம் கம்ப்யூட்டரில் பயன்படுத்தும் சாப்ட்வேர் அப்ளிகேஷன்களையும், அவை எப்படி செட் செய்யப்பட்டிருக்கின்றன என்பதையும் பொறுத்தது. இருப்பினும், சில பொதுவான பின்னணி வேலைகளை இங்கு காணலாம்.


பைல் வகைப்படுத்தல் (Indexing)

தற்போது வரும் அனைத்து கம்ப்யூட்டர்களில் இயங்கும் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களும், தங்களிடம் சேரும் பைல்களை வகைப்படுத்தும், file-indexing, வேலையை மேற்கொள்கின்றன. ஹார்ட் ட்ரைவ் முழுவதும் ஊர்ந்து சென்று, ஒவ்வொரு பைலையும், அதன் வகை மற்றும் அதில் என்ன எழுதி உள்ளது எனவும் பார்க்கின்றன. பார்த்து தனக்குக் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், ஒரு டேட்டா கட்டமைப்பினை உருவாக்கி வைத்துக் கொள்கின்றன. நாம், ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் உள்ள தகவல் தேடித்தரும் டூலைப் பயன்படுத்துகையில், இந்த டேட்டா கட்டமைப்பு பயன்படுத்தப்படுகிறது. இந்த அமைப்பினை எப்போதும் மேம்படுத்தப்பட்ட நிலையில் வைத்திட, ஹார்ட் ட்ரைவில் உள்ள பைல்களை, இந்த வகைப்படுத்தும் டூல், தொடர்ந்து கண்காணித்து வருகிறது. அதில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்படுகிறதா என்று ஆய்வு செய்து, மாற்றங்களை பதிந்து வைத்துக் கொள்கிறது. இந்தப் பணி தான் தொடர்ந்து நடைபெறுகிறது.



டிஸ்க் டிபிராக் (Disk defragmentaion)

ஹார்ட் ட்ரைவில் உள்ள பைல்களைத் தொடர்ச்சியாக ஹார்ட் ட்ரைவில் அடுக்கி வைத்திடும் வேலையே, டிஸ்க் டிபிராக் என அழைக்கப்படுகிறது. விண்டோஸ் 98 ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்துகையில், அனைத்து பைல்களையும் மூடி வைத்த பின்னரே, டிஸ்க்கினை டிபிராக் செய்திட முடியும். ஆனால், புதியதாக வரும் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில், இந்த டூல் நவீனப்படுத்தப்பட்டுள்ளது. நாம் பைல்களைப் பயன்படுத்திக் கொண்டிருந்தாலும், ஹார்ட் டிஸ்க்கில் உள்ள பைல்கள் அனைத்தையும் டிபிராக் செய்திடும் பணியை, ஹார்ட் டிஸ்க் மேற்கொள்கிறது. இந்தப் பணி, கம்ப்யூட்டரில் வேலை எதுவும் மேற்கொள்ளாத போது செய்யப்படும் வகையில், ஆப்பரேட்டிங் சிஸ்டம் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, நாம் எந்த வேலையையும் மேற்கொள்ளாமல், கம்ப்யூட்டரை விட்டு சற்று நேரம் விலகி இருக்கையில், இந்த பணி நிச்சயம் மேற்கொள்ளப்படும்.


ஆண்ட்டி வைரஸ் சோதனைப் பணி

ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களும், கம்ப்யூட்டருக்குப் பாதுகாப்பு வழங்கும் மற்ற புரோகிராம்களும், குறிப்பிட்ட கால அவகாசத்தில், பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள நாம் அமைத்திருப்போம்; அல்லது மாறா நிலையில் அதுவே அமைத்துக் கொண்டிருக்கும். இந்த பணிகள், நாம் கம்ப்யூட்டரில் எந்த வேலையும் மேற்கொள்ளாதபோதும் செயல்படுத்தப்படும். 

பேக் அப் (Back up files)

தானாக நம் பைல்களுக்கு பேக் அப் அமைக்கும் பணியினை நாம் அமைத்திருந்தால், பைல்களைப் பேக் அப் செய்து நகல்களை எடுத்து வைக்கும் பணி, நாம் கம்ப்யூட்டரை விட்டு விலகுகையிலும் மேற்கொள்ளப்படும். 


தானாக அப்டேட் செய்தல் (Automatic update)

விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம், கூகுள் குரோம், மொஸில்லா பயர்பாக்ஸ் போன்றவை தாங்களாகவே அப்டேட் செய்திடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. எனவே, நாம் வேலை செய்யாதபோது, ஹார்ட் ட்ரைவ் வேலை செய்வதாக நமக்கு அடையாளம் காட்டப்பட்டால், இந்த சிஸ்டம் அப்ளிகேஷன் புரோகிராம்கள், தங்களை அப்டேட் செய்வதற்காக பைல்களைத் தரவிறக்கம் செய்து கொண்டிருக்கலாம்.மேலே சொல்லப்பட்டிருப்பவை எல்லாம், ஹார்ட் டிஸ்க் மேற்கொள்ளும் சில தொடர் பணிகள் தான். இன்னும் பல பணிகளை, ஹார்ட் ட்ரைவ் தானாகவே மேற்கொள்ளும் வகையில் விண்டோஸ் இயங்கும். இவற்றைக் காண டாஸ்க் மானேஜர் திறந்து, Disk header கிளிக் செய்து, அப்போதைக்கு மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கும் செயல்பாடுகளைக் காணலாம். 

விண்டோஸ் 7 பயன்படுத்துபவர்கள், டிஸ்க் ஹெடர் பிரிவினைக் காண இயலாது. இதில் Performance டேப் கிளிக் செய்து, “Open Resource Monitor” தேர்ந்தெடுத்து, ஹார்ட் ட்ரைவ் மேற்கொண்டிருக்கும் பணிகளைக் காணலாம். Resource Monitor விண்டோவில், Disk டேப் கிளிக் செய்து, செயல்பாடுகளின் வரிசையைக் காணலாம். விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் 8.1 சிஸ்டங்களிலும், Resource Monitor விண்டோ கூடுதல் தகவல்களைத் தரும்.

டிஸ்க்கில் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளைப் பதிவு செய்து, பின் ஒரு நேரத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று திட்டமிட்டால், Process Monitor பயன்படுத்தலாம். இதனைச் செயல்படுத்தி, கம்ப்யூட்டரிலிருந்து நீங்கள் விலகிச் சென்றால், ஒருவரும் பயன்படுத்தாத போது, ஹார்ட் ட்ரைவ் மேற்கொள்ளும் பணிகளைக் காணலாம். ப்ராசஸ் மானிட்டர், பல வகை செயல்பாடுகளைப் பதிவு செய்திடும். எனவே, டூல்பாரில் உள்ள பட்டன்களைக் கிளிக் செய்து, பைல் சிஸ்டம் அமைப்பில் உள்ள பைல்களில் மேற்கொள்ளப்படும் பணிகளை மட்டும் பதிவு செய்திடும்படி செட் செய்திடலாம்.

எனவே, நீங்கள் பயன்படுத்தாத போது, கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க் செயல்படுவதனை அதன் எல்.இ.டி.விளக்கு எரிந்து காட்டினால், கவலைப்பட வேண்டாம். சில நல்ல தேவையான பணிகளே மேற்கொள்ளப்படுகின்றன என்று அமைதியடையவும். அப்படியும் வைரஸ் அல்லது மால்வேர் எனச் சந்தேகப்பட்டால், உங்களிடம் உள்ள ஆண்ட்டி வைரஸ் கொண்டு, ஒரு முறை முழுமையாக ஸ்கேன் செய்திடவும்.

Laptop Battery Life Time Increasing Method

wt8b0iX.jpg



டெஸ்க் டாப் கம்ப்யூட்டர்களைக் காட்டிலும், லேப் டாப் கம்ப்யூட்டர்கள் தான் அதிக எண்ணிக்கையில் இப்போது பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனைப் பராமரிப்பதில், இதன் பேட்டரிகளே முதல் இடம் பெறுகின்றன. பேட்டரி பராமரிப்பிற்கான சில குறிப்புகள் இங்கு தரப்படுகின்றன.
 


எப்போதும் இணைப்பில் வேண்டாம்: 

DgQdnYg.gif




உங்கள் லேப் டாப் கம்ப்யூட்டரை முதன் முதலில் சார்ஜ் செய்திடுகையில், அதனை 100% சார்ஜ் செய்திடவும். அதன் பின்னர், அதன் சார்ஜ் 40% முதல் 80% வரை என்ற அளவில் இருக்க வேண்டும். பேட்டரியில் உள்ள எலக்ட்ரான்கள் எப்போதாவது அங்கும் இங்கும் நகர்வதற்கான இடம் இருக்க வேண்டும். இந்த குறிப்பினை ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்நிலையில் பேட்டரியை வைத்திருந்தால், பேட்டரியின் வாழ்நாள் நான்கு பங்கு அதிகரிக்கும். எப்படி இந்த அளவினைக் கண்காணித்து வைத்திருப்பது? என்று கேட்கிறீர்களா? இதனை கம்ப்யூட்டர் திரையின் ஓரமாகக் கவனிக்கலாம். லேப்டாப் கம்ப்யூட்டரில் வேலை பார்க்கவில்லையா? உடன் அதனை ஆப் செய்து, மூடி, மின்சக்தியிலிருந்து விடுவித்து, வீட்டில் வைக்கவும். இதனை வைத்திடும்போது, ஏதேனும் ஒரு மேஜை அல்லது அதைப் போன்ற பரப்பில் வைக்கவும். மெத்தை போன்றவற்றில் வைக்க வேண்டாம். பேட்டரியின் வெப்பம் வெளியேறுவதனை மெத்தை போன்ற பரப்பு தடுக்கும். இது பேட்டரியின் வாழ்நாள் பயன்பாட்டினைக் குறைக்கும். அப்படிப்பட்ட பரப்பில் வைத்து இயக்குவதும் தவறு.



சார்ஜ் செய்தல்:

8A06IsL.jpg


 மாதம் ஒருமுறையேனும், பேட்டரியை முழுமையாக (100%) சார்ஜ் செய்திட வேண்டும். அதே போல, ஒரு முறையேனும், முழுமையாக அதன் மின்சக்தியைக் காலி செய்து பின் சக்தி ஏற்ற வேண்டும். இந்த 'மாதம் ஒரு முறை' என்பதனை எதிலேனும், குறிப்பாக மொபைல் போனில், அல்லது கம்ப்யூட்டர் திரையில் உள்ள ஸ்டிக்கி குறிப்பில், எழுதி வைக்க வேண்டும். அப்போதுதான் இது நினைவிற்கு வரும்.



குளிர்ச்சியாக இருக்கட்டுமே: 

தற்போது வரும் நவீன பேட்டரிகள் அனைத்தும், லித்தியம் அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டவை. எனவே இவற்றை 50 முதல் 95 பாரன்ஹீட் டிகிரி (10 முதல் 30 டிகிரி செல்சியஸ்) அளவில் வைத்திருக்க வேண்டும். இதனை நாம் எப்போதும் அளந்து வைத்திருக்க முடியாது. எனவே, நாம் பணியாற்றும் அறையைச் சற்றுக் குளிர் தன்மையுடன் வைத்திருக்க வேண்டும். அத்துடன் லேப்டாப் கம்ப்யூட்டரில் காற்று வெளியேறும் வழிகளைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். வெப்பக் காற்று விரைவாக வெளியேறுகிறதா என்பதனைக் கண்காணிக்க வேண்டும். 



அப்டேட் செய்திடுக:


Jf5knHF.jpg

 பல நிறுவனங்கள், தங்களின் சாப்ட்வேர் அப்ளிகேஷன்களை மேம்படுத்துகையில், பேட்டரியின் திறனை மேம்படுத்தும் வழிகளையும் தங்கள் பைல்களில் தருகின்றன. எனவே, நாம் லேப்டாப் கம்ப்யூட்டரில் பயன்படுத்தும் சாப்ட்வேர் அப்ளிகேஷன்கள் அனைத்திற்கும் அவ்வப்போது, அப்டேட் செய்திடுவது பேட்டரியின் வாழ்நாட்களையும் அதிகரிக்கும்.



நீண்ட நாட்கள் பயன்படுத்தாமல் இருப்பது நல்லதல்ல: 


ஏதேனும் காரணத்தினால், லேப்டாப் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தாமல், பல மாதங்கள் விட்டுவிடுவதாக இருந்தால், அதற்கான மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ளவும். பேட்டரியில் 50% மின் சக்தியுடன், குளிர்ச்சியான இடத்தில் அது வைக்கப்படுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். மொத்தமாக மின் சக்தி இல்லாத நிலையில் உள்ள பேட்டரிகளுடன், லேப் டாப் கம்ப்யூட்டரைப் பல மாதங்கள் விட்டு வைப்பது, பின் எப்போதும் பயன்படுத்த இயலாத நிலைக்கு பேட்டரியைக் கொண்டு சென்றுவிடும்.