Pinned:
பின் செய்யப்பட்ட அல்லது குத்தி வைக்கப்பட்ட என்ற பொருளைக் கொண்ட இந்த சொல், விண்டோஸ் சிஸ்டத்தில், நாம் அடிக்கடி பயன்படுத்தும் அப்ளிகேஷன் புரோகிராம்களை, உடனடியாக எடுத்துப் பயன்படுத்தும் வகையில் அமைப்பதனைக் குறிக்கிறது. அப்ளிகேஷன்கள் மட்டுமின்றி, புரோகிராம்கள், இணைய தளங்களுக்கான லிங்க் என எதனையும் பின் செய்து வைக்கலாம். இவற்றை ஒரு மெனுவில் வைத்து, நாம் விரும்பும்போது இயக்கலாம். எடுத்துக் காட்டாக, விண்டோஸ் விஸ்டா ஸ்டார்ட் மெனு, இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மேலாக உள்ள பாதிப் பிரிவு, இது போன்ற பின் செய்யப்படும் புரோகிராம்களுக்கானது. எந்த புரோகிராம்களை எல்லாம் நாம் அடிக்கடி பயன்படுத்துகிறோமோ, அவற்றை இதில் பதிந்து வைக்கலாம்.
Carbon Copy:
மின் அஞ்சல் அனுப்புகையில், முகவரிக்குக் கீழாக “CC:” என்ற பிரிவினைப் பார்த்திருப்பீர்கள். கார்பன் காப்பி என்பதன் சுருக்கம் இது. அனுப்பப்படும் மின் அஞ்சல் செய்தியினை, பல நபர்களுக்கு நகலாக அனுப்ப,இந்த முகவரிக் கட்டத்தினைப் பயன்படுத்தலாம். அதாவது, அனுப்பப்படும் அஞ்சல் தகவல்கள், இந்த கார்பன் காப்பி கட்டத்தில் உள்ள முகவரிக்குரியவர்களுக்கு அல்ல; ஆனாலும், அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி என்பதே இதைக் குறிக்கிறது. அஞ்சல் யாருக்கு எழுதப்படுகிறதோ, அவரின் முகவரி “To:” என்ற பிரிவில் அமைக்கப்படுகிறது.
Blind Carbon Copy :
மின் அஞ்சல் அனுப்புகையில், “BCC:” என்ற பிரிவினைப் பார்த்திருப்பீர்கள். இந்த பிரிவிலும், குறிப்பிட்ட அஞ்சலை நகலாக அனுப்பலாம். ஆனால், இந்தப் பிரிவில் உள்ள முகவரியில் உள்ளவர்கள் பெறுவதனை, அஞ்சலைப் பெறுபவர் மற்றும் கார்பன் காப்பி பிரிவில் உள்ளவர்கள் அறிய மாட்டார்கள். அவர்கள் அறியாமல், சிலருக்கு அனுப்ப இந்த ப்ளைண்ட் கார்பன் காப்பி உதவிடுகிறது. பொதுவாக, இது போன்ற பழக்கத்தை நாகரிகம் கருதி யாரும் பயன்படுத்துவதில்லை ஏனென்றால், இது நம்மிடமிருந்து அஞ்சலைப் பெறுபவர்களின் நம்பிக்கைக்கு ஊறு விளைவிப்பதாகும். பெறுபவர்களின் பட்டியலை, மற்றவர்களிடமிருந்து மறைக்க வேண்டும் என எண்ணுபவர்கள், இதனைப்பயன்படுத்துவார்கள்.
Client:
கம்ப்யூட்டர் நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டு சர்வராக இயங்காமல் பயன்படுத்தப்படும் எந்த கம்ப்யூட்டரும் கிளையண்ட் என அழைக்கப்படும்.
Doc:
இது ஒரு பைலின் பெயரில் உள்ள துணைப் பெயர். இந்த பெயருடன் உள்ள பைல் மைக்ரோசாப்ட் வேர்ட் தொகுப்பில் உருவான பைல் என்பதனை இது குறிக்கிறது.
Domain Name:
இன்டர்நெட்டில் உள்ள தகவல் தளங்களை இச் சொல்லால் குறிப்பிடுகின்றனர். அந்த தளத்தின் பெயரை இது குறிக்கிறது.
Download:
கம்ப்யூட்டர் ஒன்றிலிருந்து நேரடியாக இன்னொரு கம்ப்யூட்டருக்குப் பைலை மாற்றுவதனை டவுண்லோட் எனக் குறிப்பிடுகிறோம். இருப்பினும் இன்டர்நெட் நெட்வொர்க்கில் இணைந்துள்ள கம்ப்யூட்டரிலிருந்து ஒரு பைல் இறக்கிப் பதியப்படுவதனையே இது பெரும்பாலும் குறிக்கிறது.
Hard Disk :
(ஹார்ட் டிஸ்க்) பைல்களைப் பதிந்து வைத்து இயக்கப் பயன்படும் ஓர் அடிப்படை சாதனம். இதில் அனைத்து வகை பைல்களையும் பதியலாம். ஆப்பரேட்டிங் சிஸ்டம் (விண்டோஸ்), அப்ளிகேஷன் சாப்ட்வேர் (எம்.எஸ்.ஆபீஸ், பேஜ்மேக்கர் போன்றவை) மற்றும் இவற்றால் உருவாக்கப்படும் பைல்கள் அனைத்தையும் இதில் பதியலாம். இதனை முறையாகவும் கவனமாகவும் கையாள வேண்டும். இது கெட்டுப் போவதைத்தான் ஹார்ட் டிஸ்க் கரப்ட் ஆகிவிட்டதாகக் கூறுவார்கள். ஒரு முறை கெட்டுப் போனால் அதனை மீண்டும் சரி செய்வது சிரமமான காரியம். எனவே இதில் பதியப்படும் பைல்களுக்கு நகல் எடுத்து தனியே இதைப் போன்ற வேறு சாதனங்களில் பதிந்து வைப்பது நல்லது.
Bandwidth:
இணைக்கப்பட்ட இரு வேறு சாதனங்கள் இடையே நடைபெறும் டேட்டா பரிமாற்றத்தில் அதிக பட்ச டேட்டா பரிமாற்ற வேகத்தின் அளவை இது குறிக்கிறது. இது டேட்டா பயணிக்கும் வேகம் அல்ல.
Network:
நெட்வொர்க் (இன்டர்நெட் உட்பட)கில் இணைக்கப்பட்டிருக்கும் ஒரு கம்ப்யூட்டரில் உள்ளே அனுமதியின்றி வரும் அடுத்தவரின் முயற்சியைத் தடுக்கும் ஒரு சாப்ட்வேர் அல்லது சிறிய ஹார்ட்வேர் சாதனம்.
No comments:
Post a Comment